அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு நல்ல அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்து சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும்.
வேப்பிலையை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் சருமம் இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி காணப்படும் . இதனை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
தக்காளியை அரைத்து தினமும் சருமத்தில் மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கி முகம் அழகாக காணப்படும் .
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் முகத்தில் நன்கு ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்க செய்யும் .