053.800.668.160.90 1
சரும பராமரிப்பு

உங்களுக்கு சருமத்தை மிருதுவாக்கி பொலிவாக்க வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்..

பழவகைகளில் ஒன்றான திராட்சை உடல் நலனுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.

அதிலும் பச்சை திராட்சை உடலுக்கு பல வகையில் நன்மை வழங்குகின்றது.

ஏனெனில் ஒரு கப் பச்சை திராட்சையில் கலோரி 104, நார்ச்சத்து 1.4 கிராம், விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் சருமத்தின் அழகிற்கு பச்சை திராட்சையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

  • தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.
  • எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.
  • இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.
  • ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். இது சருமத்தை மிருதுவாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.053.800.668.160.90 1
  • ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்கி ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.
  • காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.
  • காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

Related posts

தலை முதல் பாதம் வரை அழகு பராமரிப்பு

nathan

சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை பராமரிப்பது எப்படி?

sangika

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika

மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்

nathan

உங்கள் சருமப் பிரச்சனைகளை விடுபடச் செய்யும் இந்த அழகுக் குறிப்பை பற்றி தெரியுமா?

nathan

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika