10oct fish cutlet 1
சிற்றுண்டி வகைகள்

ஈஸி வெஜ் கட்லட்

செ.தே.பொ :-
கடுகு – 1 தே.கரண்டி
பெருஞ்சீரகம் – 1தே.கரண்டி
மிளகாய்த்தூள் – 2தே.கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – 1/2தே.கரண்டி(விரும்பின்)
ரஸ்க் தூள் – 1 கப்
உருளைக்கிழங்கு – 2 பெரியது
வெங்காயம் – 1 பெரியது
ப.மிளகாய் – 2 சிறிதாக வெட்டி
கரட் – 1/2 கப் துருவியது
கோவா – 1/2 கப் பொடியாக நறுக்கி
கறிவேப்பிலை – 1 நெட்டு ( சிறிதாக வெட்டி)
கோதுமை மா – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :
* முதலில் உருளைக்கிழங்கை அவித்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து, சட்டி சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு சிறிது பொரிய விடவும்.
* அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக கிளறி விட்டுக்கொள்ளவும். வெங்காயம் நிறம் மாறத் தொடங்கியதும் கரட், கோவா சேர்த்து நன்றாக வதங்கும் வரை மூடி விடவும்.
* வதங்கி வரும் போது மிளகு தூள்,மிளகாய்த்தூள், உப்பு,(விரும்பினால் கரம் மசாலா) சேர்த்து கிளறி 2 நிமிடம் மூடி விடவும்.
* எல்லாம் சேர்ந்து வதங்கியதும், அதனுள் அவித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து உலர்த்தி போட்டு 1-2 நிமிடம் கிளறி இறக்கவும்.
கலவை இப்போது தயார்………….
* கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது தடிப்பாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
** கறிக் கலவையை சிறிது ஆறியதும், சிறிய உருண்டைகளாக உருட்டி, மாக் கலவையில் நன்றாகத் தோய்த்து, ரஸ்க் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து
எடுத்து பரிமாறவும்.
10oct fish cutlet 1

Related posts

குழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ்

nathan

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

மசாலா பூரி

nathan

கைமா இட்லி

nathan

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

சுவையான மசாலா பொரி

nathan

தித்திப்பான திரட்டுப்பால் செய்வது எப்படி

nathan

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan

வெஜிடபிள் உருண்டை

nathan