201708301429023068 1 facemask. L styvpf
முகப் பராமரிப்பு

இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் – 1
ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க் :

முட்டையின் வெள்ளைக் கரு உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே இது சரும கோடுகளை காணாமல் செய்து விடும். தேனில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

வெள்ளைக் கரு – 1
லெமன் ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு நீரில் கழுவினால் இளமையான அழகான சருமம் உடனே கிடைக்கும்.
201708301429023068 1 facemask. L styvpf

Related posts

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

வெயிலில் கருத்துவிட்டதா முகம்?

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

மூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க… தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

nathan

அடர்த்தியா புருவம் வளரனும்னு ஆசையா? அப்ப இத படிங்க!!

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்

nathan