மன அழுத்தம் முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
மாசு மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தொழிற்சாலை பக்கமாக குடியிருக்கிறீர்கள் என்றால், அங்கே நிலவும் மாசு படிந்த சுற்றுச்சூழலும், ரசாயனம் கலந்த நச்சு காற்றும், தலை முடியை வெகுவாக பாதிக்கும். இதனால் தலை முடி தன் பொலிவை இழந்து களையிழந்து காணப்படும்
பூஞ்சைத் தொற்று செபோர்ஹோயிக் தோல் அழற்சி போன்ற பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், தலை சருமம் அரிப்பு எடுத்து, முடி கழிதல் ஏற்படும். இவ்வகை தொற்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் விடலை பசங்களைத் தான் அதிகம் தாக்கும்
சிகை அலங்கார பொருட்கள் ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.