பிரவுன் நிறம் :
வால் நட் ஓடு அருமையான நிறமூட்டியாகும். இது சிறந்த அடர் பிரவுன் நிறத்தை தரும். வால் நட் ஓட்டை பொடி செய்து அதனை நீரில் போட்டு குறைந்த தீயில் அரை மணி நேரம் கொதிக்க வையுங்கள்.
பின்னர் வடிகட்டி அந்த நீரை தலையில் த்டவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இப்படி செய்தால் தலைமுடி பிரவுன் நிறத்திற்கு மாறிவிடும்.
இன்னும் அதிக பிரவுன் நிறத்திற்கு கூந்தல் தேவையென்றால் அந்த வடிகட்டிய நீரை மீண்டும் கால் பங்காக ஆகும் வரை கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை தலையில் த்டவினால் அடர்ந்த பிரவுன் நிறத்தை பெறலாம்.
அடர் சிவப்பு நிறம் :
குப்பை மேனி இலைகள், ரோஸ்மெரி மற்றும் சேஜ் இதழ்கள் ஆகிய்வற்றை நீரில் போட்டு 30 நிமிடங்கல் கொதிக்க வையுங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அந்த நீரை தலையில் தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
சிவப்பு நிறம் :
சாமந்தி பூ, ரோஸ்மெரி இதழ், செம்பருத்தி இதழ், செவ்வந்தி இதழ் ஆகிய்வற்றை நீரில் போட்டு குறைவான தீயில் 1 மணி நேரம் கொதிக்கவிடுங்கள். பின்னர் வடிகட்டி அதனை கூந்தலில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறம் :
சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் கூந்தல் வேண்டுமா? கேரட் சாறு மற்றும் பீட்ரூட் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து தலையில் தடவுங்கள். தலைமுடி காய்ந்ததும் அலசலாம். அதிக ஆரஞ்சு நிறம் வேண்டுமென்றால் கேரட் சாறு அதிகமாகவும், அல்லது அதிக சிவப்பு நிறம் வேண்டுமென்றால் பீட்ரூட் சாறு அதிகமாகவும் உபயோகியுங்கள்.
வெளிர் மஞ்சள் நிறம்
சிலருக்கு வெளிர் மஞ்சள் நிறம் பிடிக்கும். ஒரு மாற்றத்திற்காக கூந்தல் நிறத்தை மாற்ற விரும்பினால் இந்த ரெசிபியை முயற்சி பண்ணுங்கள் குங்குமப் பூ, சாமந்தி பூ, சீமை சாமந்தி, சூரிய காந்தி ஆகியவற்றின் இதழ்களை நீரில் போட்டு நன்றாக அரை மணி நேரம் கொதிக்க வைக்க வெண்டும். பின்னர் வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அந்த நீரினால் தலை முடியில் த்டவுங்கள். 1 மணி நேரம் கழித்து அலச வெண்டும். இப்படி செய்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும்