26.9 C
Chennai
Tuesday, Nov 5, 2024
Pudim de leite
இனிப்பு வகைகள்

இனிப்பு விரும்பிகளுக்கு பாணிக் கடும்பு (pudding)

தேவையான பொருட்கள் :

2 கப் சீனி (பாணிக்கு)

6 கப் பால்

3 கப் தலைப்பால்

5 மேக சீனி

1 வனிலாத்தண்டு

8 முட்டை

செய்முறை

2 கப் சீனியை ஒரு (nonstick ) சட்டியிலிட்டு மிதமான வெப்பத்தில் உருக்கவும்.

பொன்னிறம் ஆனதும் பாணியை ஒரு பாண் பெட்டியில் ஊற்றி சுழாவவும்.

பாணி கூடியவரையில் பாண் பெட்டியில் பிரள விட வேண்டும்.

வனிலாத்தண்டினை இரண்டாகக் கீறி உள்ளுடனை வலித்து எடுத்து ஒரு சட்டியில் இடவும்.

அதே சட்டியில் பால், தலைப்பால், சீனி எல்லாவற்றையும் கலந்து ஒரு கொதி கிளம்பும் வரை காய்ச்சவும். இறக்கி வைத்து புறங்கையில் சுடும்பதம் வரை ஆற வைக்கவும்.

முட்டைகளை இலேசாக அடித்து பாற்கலவையில் கலந்து காற்றுக்குமிழ்களை போக்காட்டுவதற்காக சில நிமிடங்கள் வைக்கவும்.

பின் பால்வடி கொண்டு வடித்து பாண் பெட்டியில் ஊற்றவும்.

பாண் பெட்டியை 1/3 பங்கு உயரத்துக்கு நீர் கொண்ட பெரிய தட்டில் வைத்து வெதுப்பு அடுப்பின் கீழ்க் கடைசி மட்டத்தில் வைத்து 120 பாகை வெப்பத்தில் 2 மணிநேரம் வேக வைக்கவும்.

சாதுவாகப் பொன்னிறம் காட்டும் தருணத்தில் வெளியே எடுத்து ஒரு இரவு முழுக்க ஆற வைக்கவும்.

காலையில் எடுத்துக் குளிர்பெட்டியில் வைக்கலாம்.

பரிமாறும் முன்னர் பாண் பெட்டியின் 4 பக்கமும் ஒரு கூரிய கத்தியால் கீறிவிட்டு பாண் பெட்டியை விடச் சற்றே பெரிய தட்டை அதன் மேல் கவிழ்த்து வைக்கவும்.

பின் பாண் பெட்டியையும் மூடி வைத்த தட்டையும் “அவுக்” கென்று திருப்பவும். ஆறுதலாகத் திருப்பினால் பாணி கீழே ஊற்றுப்படும்.

திரள அடித்த தலைப்பாலை பிதுக்கி விட்டு அலங்கரித்து, பரிமாறவும்.
Pudim de leite

Related posts

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

சீக்ரெட் ரெசிபி – சோன் பப்டி

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

தித்திப்பான ரவை – தேங்காய் உருண்டை

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

சூப்பரான கீர் செய்யலாம் வாங்க…

nathan

வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி

nathan