inippu somas
இனிப்பு வகைகள்

இனிப்பு சோமாஸ்

என்னென்ன தேவை?

எண்ணெய் – தேவைக்கு.

ஃபில்லிங்குக்கு…

கருப்பு எள் – 1 டேபிள்ஸ்பூன் (வறுத்தது),
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன் (வறுத்தது),
தேங்காய் – 1/2 மூடி (துருவியது),
சர்க்கரை – 3/4 டம்ளர்,
நெய் – 1 டீஸ்பூன்,
முந்திரி, பாதாம் – தலா 5 (பொடியாக அரிந்து கொள்ளவும்).

மாவு தயாரிக்க…

மைதா மாவு – 1/4 கிலோ,
ரவை – 50 கிராம்,
சமையல் சோடா – சிறிது,
உப்பு – தேவைக்கு,
டால்டா (அ) பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

ஃபில்லிங்குக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி, மாவில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்துக் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாம் போட்டு வறுத்து, வெள்ளை எள், கருப்பு எள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சிறிது கெட்டியாக இருக்கும். ஆற வைக்கவும். மாவை பூரி மாவு உருண்டை அளவுக்கு உருட்டி, லேசாக மாவு தடவி திரட்டி, சோமாஸ் அச்சில் வைத்து ஃபில்லிங்கை வைத்து மூடவும். எல்லாவற்றையும் இதே போல் செய்து வைக்கவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, தணலை மிதமாக வைத்து, சோமாஸை பொரித்து எடுக்கவும். நன்கு திருப்பிப் போட்டு, கருகாமல் எண்ணெயை வடிய விட்டு எடுத்து வைக்கவும். இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கச் செய்யும் ஒரு ஸ்பெஷல் அயிட்டம். எள்ளை கல்லெடுத்து, வடித்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது பட படவென பொரிய வேண்டும்.
inippu somas

Related posts

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் சாக்லேட்

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

பூந்தி லட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பால் போளி

nathan

கேரட் பாயாசம்

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்..!எளிதாக எப்படி செய்வது

nathan

ரசகுல்லா செய்முறை!

nathan