மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியில் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர் மற்றும் பூவிலும் கூட பல நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.
துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினசரி 12 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கு ஒரு இதமான உணர்வை தருகிறது.
துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது சளி மற்றும் காய்ச்சலை குறைக்க உதவும். மேலும், நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.
தொண்டை புண் இருப்பவர்கள் சில துளசி இலைகளை குடிநீரில் வேக வைத்து குடித்து வந்தால், தொண்டை புண் விரைவில் குணமடையும்.
துளசி இலைகளின் சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்களை சிறுநீர் பாதை வழியாக உடனடியாக வெளியேற்றும். மேலும், துளசி இலை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
துளசி இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவு வியாதி மற்றும் புற்று நோயின் அபாயம் குறைகிறது. துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை, புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது.