இன்றைய கால ஆண்களுக்கு பெண்களும் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக முகப்பரு உள்ளது.
இது முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.
இதற்கு கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கமால் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.
தற்போது முகப்பருவை நிரமாக விரட்டும் சில இயற்கை சிகிச்சைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
- ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) முகத்தைக் கழுவுங்கள்.
- வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடி சுத்தப்படுத்துங்கள். முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தலாம். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்க கூடாது.
- ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்ட் பக்குவத்தில் இல்லையெனில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் கூட சேர்க்கலாம். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
- துளசி இலை பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமிட்டி ஒரு ஸ்பூன் நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
- வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
- பட்டைத்தூளை தேன் கலந்து குழைத்துக் கொள்ளவும். பரு உள்ள இடத்தில் மட்டும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்யலாம்.