கேரட் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதோடு, சருமத்திலும் பல மாயங்களைப் புரியக்கூடியது.
இயற்கை பெருட்களான கேரட்டைக் கொண்டு மாஸ்க் போடும் போது, சருமம் நன்கு சுவாசித்து ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகளை அதிகம் கொண்டவர்கள், அதனைப் போக்க வீட்டில் உள்ள கேரட் வைத்தே போக்கி, முக அழகை மேம்படுத்தலாம்.
முகப்பரு நீங்க..
தேவையான பொருட்கள்
கேரட் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வேக வைத்த கேரட்டை நன்கு மசித்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால், பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, சீக்கிரம் பருக்கள் காணாமல் போகும்.