உடலினுள் பிரச்சனைகள் ஏற்படுவதை விட தேகத்தின் வெளிப்புறத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதனால் தான், பலரும் மனதளவில் பாதிப்பிற்குள்ளகின்றனர். இதற்கு, காரனம் அழகென்ற ஒரு விஷயம் தான். யாருக்கு தான் அழகாக இருக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும்.
மனிதனாய் பிறந்த அனைவரும் அழகாக இருக்க தான் விரும்புகின்றனர். வெயில் மற்றும் சுற்றுப்புற சூழலின் காரணமாக சருமம் பொலிவிழந்துவிடுகிறது. இதனால், பல சரும கோளாறுகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் சரும கோளாறுகளில் இருந்து விரைவில் தீர்வுக் காண இந்த ஐந்து எளிய வழிமுறைகளை தினமும் பின் பற்றுங்கள்…
நன்கு முகம் கழுவுங்கள்
எப்போது வெளியில் சென்று வந்தாலும், வீட்டிற்கு திரும்பியவுடன் முகம் கழுவுதல் அவசியம். அதிக நேரம் மாசு உங்கள் சருமத்தில் தங்குவதனால், சரும துளைகலினுள் நுழைந்து பரு போன்ற சரும பிரச்சனைகள் வர காரணமாகிறது.
கிரீம்
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் வெளியில் செல்லும் போது, சன் ஸ்க்ரீன் க்ரீமகளை பயன்படுத்துங்கள். அதற்கு முன் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துபோப்குமா என அறிந்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.
ரெட்டினால் (Retinol)
ரெட்டினால் எனப்படும் வேதியல் பொருள் கலப்பு உள்ள கிரீம்களை பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை நன்கு பாதுகாக்க வல்லது.
நீராவி
நீராவி பிடித்தல் மிகவும் நல்லது, இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கவும், புத்துணர்ச்சி அடையவும் பெருமளவு உதவுகிறது.
வியர்வை வரும் வரை…
தினமும் வியர்வை வரும் வரை நன்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உங்கள் முக சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை குறைக்க உதவும். பயிற்சி செய்தவுடன் வியர்வை காயும் வரை இருக்காமல், உடனே முகம் கழுவுதல் மிகவும் முக்கியம்.