ஆப்பிள் ரசம் தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2. செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.
Related posts
Click to comment