தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1,
மைசூர் பருப்பு – 100 கிராம்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
சீரகம், மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
• கொத்தமல்லி, ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
• பருப்பை வேகவைத்துக்கொள்ளவும்.
• கடாயில் வெண்ணெயைப் போட்டு, நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
• வேகவைத்த பருப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
• கொதித்து வரும் போது நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வேக விடவும். நன்றாக மசிந்து வரும்போது, கொத்தமல்லித் தழை சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.
• விருப்பப்பட்டால், க்ரீம் சேர்க்கலாம்.