உடல் உறுப்புகளின் இயக்கத்தால், நம் உடலின் வெப்பம் ஏறிக்கொண்டே இருக்கும். ஆனாலும், இந்த சூடு இயற்கையாகவே சீராகி விடும்.
ஆனால், தற்போது மாறி வரும் கலாச்சாரம் மற்றும் நம் வாழ்க்கை முறைகளால் இது தடுக்கப்பட்டு, உடல் சூடு அப்படியே நம் உடலில் தங்கி விடுகிறது.
குளித்த பின் ஏன் வியர்க்கிறது ?
குளிர் காலத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தால் குளிராகவே இருக்கும்.
அதிலும், குறிப்பாக உங்கள் வீட்டின் குளியலறையும் ஈரப்பதமாகவே இருக்கும். அப்போது நீங்கள் சூடான நீரில் குளிக்கும் போது, உங்கள் சருமம் மற்றும் முடியுடன் இணையும் சூடான நீர், உங்களின் உடல் வெப்பநிலையுடன் இணையும்.
இதனால், வியர்வை ஏற்படுவது போல் நீங்கள் உணரலாம்.
நாம் குளிப்பதற்கு முன் நம் உடலின் வெப்பநிலை வேறாகவும், குளிக்கும் போது உடலின் வெப்பநிலை வேறாகவும் இருக்கும். குளிக்கும்போது, நமது உடலில் சட்டென்று வெப்பநிலை மாறும். இதனால் நமக்கு வியர்க்கும்.
அதாவது, நமது உடல் புதிய வெப்பநிலைக்கு மாற சுமார் 10 வினாடிகள் ஆகும். இந்தப் பத்து வினாடியில் தான் நமக்கு வியர்க்க ஆரம்பிக்கும் என்கின்றனர் தோல் மருத்துவர்கள்.
மேலும், நீங்கள் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் அலச முயற்சி செய்யுங்கள். இதனால், உங்களின் உச்சந்தலை சூடாக மாறாது. சூடான நீரில் தலைக்கு குளிப்பது, உங்கள் தலையை சூடாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூடான நீரில் ஏன் முகத்தை கழுவக் கூடாது ?
உங்களின் உடலில் சூடு தங்காமல் இருக்க நீங்கள் முகத்தை கழுவும் விதமும் மிக முக்கியம்.
முகத்தை எப்போதுமே சூடான நீரில் கழுவக் கூடாது. ஏனெனில், சூடான நீரில் முகத்தைக் கழுவும் போது, அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கி, ஈரப்பதத்தை வெளியேறச் செய்யும்.
உங்கள் முகத்தை கழுவ சிறந்த நீர் மிகவும் சூடாகவும், குளிராகவும் இருக்கக் கூடாது.
குளியலுக்குப் பிறகு வியர்க்காமல் இருக்க, உங்கள் குளியலறையை முடிந்தவரை காற்றோட்டமாக வைத்திருப்பது உதவியாக இருக்கும். அதோடு, நீங்கள் குளித்து முடித்த பிறகு உடனே அந்த ஈரப்பதமான சூழலில் முடிந்தவரை வெளியேறி விடுங்கள்.
இல்லையெனில், குளித்த உடன் வியர்க்காமல் இருக்க, துணியை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, அந்தத் துணியை உங்கள் முகம் மற்றும் உச்சந்தலையில் தடவினால், அது உங்களை குளிர்விக்க உதவும்.
எப்போதும் சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரில் குளிப்பதே உடலின் சூட்டைக் குறைக்க உதவும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.