இளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன்கு வளர்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் ஜீன்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். முன்பெல்லாம் தாடி வைப்பதன் பின்னணியில் பல சோகமான காதல் கதைகள் இருக்கும். ஆனால் தற்போது தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது.
இருந்தாலும், தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர். உண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாக நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரியும். அத்தகைய நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் தாடி வளரும் இடத்தில் 15-20 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், தாடி விரைவில் வளர ஆரம்பிக்கும்.
சிறிது வெந்தயக்கீரையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதில் நெல்லிக்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பட்டை தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்மு, தாடி வளரும் இடத்தில் மெல்லிய லேயர் போன்று தடவி 15-20 ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு அப்பகுதியில் ஏதேனும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், தாடியின் வளர்ச்சியை வேகப்படுத்தலாம்.
தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது. அதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.
தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது. அதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.
ஷேவிங் மட்டுமின்றி, ட்ரிம்மிங் செய்வதன் மூலமும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ட்ரிம் செய்வதன் மூலம், தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.