இந்திய ஆண்கள் தங்களின் உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை நீக்கலாமா கூடாதா என்ற சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய உலகில் ஆண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை அவ்வப்போது நீக்குவது நல்லது.
மேலும் தற்போது பல பெண்களும் அதையே விரும்புகின்றனர். எனவே நீங்கள் உங்கள் உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை நீக்க நினைத்தால், இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இங்கு ஆண்களின் உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகளை எந்த முறையில் நீக்குவது சிறந்தது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அக்குள்
அக்குளில் வளரும் முடி இருந்தால் வியர்வையின் போது கடுமையான துர்நாற்றம் வீசும். எனவே இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் அப்பகுதியில் வளரும் முடியை நீக்கிவிட வேண்டும். மேலும் அக்குளில் வளரும் முடியை ஷேவ் செய்வதற்கு பதிலாக, ட்ரிம் செய்வது தான் சிறந்தது. எனவே ரேசர் பயன்படுத்தாமல், ட்ரிம்மர் பயன்படுத்தி நீக்குங்கள். இதனால் அக்குள் முடி கடினமாவதைத் தடுக்கலாம். குறிப்பாக அக்குளில் ஈரப்பசை இல்லாத போது ரிம்மர் பயன்படுத்துங்கள்.
மார்பக முடி
ஆண்களுக்கு அழகே நெஞ்சில் வளரும் முடி தான். இதை நீக்குவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் நெஞ்சில் வளரும் முடியை நீளமாக வளர்க்காதீர்கள். நீளமாக முடி வளர்ந்தால் லேசாக ட்ரிம் செய்து விடுங்கள். ஒருவேளை உங்களுக்கு நெஞ்சில் வளரும் முடி பிடிக்காவிட்டால், முதலில் ட்ரிம்மர் பயன்படுத்தி விட்டு, பின் ஷேவ் செய்யுங்கள். மேலும் ட்ரிம்மர் பயன்படுத்திய பின் ஷவரில் ஒரு குளியல் போட்டுவிட்டு, பின் ஷேவ் செய்தால், நெஞ்சில் உள்ள முடியை ஒழுங்காக ஷேவ் செய்து நீக்கலாம். முக்கியமாக மார்பக முடியை நீக்குவதாக இருந்தால், 3 வாரத்திற்கு ஒருமுறை நீக்க வேண்டும்.
பின் கழுத்து மற்றும் முதுகு
முதுகு மற்றும் பின் கழுத்தில் வளரும் முடியை மாதம் ஒருமுறை நீக்க வேண்டும். கண்டிப்பாக முதுகு மற்றும் பின் கழுத்தில் வளரும் முடியை உங்களால் நீக்க முடியாது. எனவே ஹேர் கட் செய்யும் போது, முடி ஒப்பனையாளரிடம் சொல்லி நீக்குங்கள்.
அந்தரங்கப் பகுதி
ஆண்களின் அந்தரங்கப் பகுதி மிகவும் சென்சிடிவ்வானது. அப்பகுதியில் வளரும் முடியை மூன்று வாரத்திற்கு ஒருமுறை ட்ரிம் செய்ய வேண்டும். சொல்லப்போனால் ஒவ்வொரு ஆணும் இப்பகுதியை சுத்தம் செய்ய தவறக்கூடாது. மேலும் உங்கள் துணையும் அதையே விரும்புவார்கள். அந்தரங்கப் பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்யுங்கள். ஏனெனில் ஷேவ் செய்தால், அப்பகுதியில் வளரும் முடி கடினமாகிவிடும். பின் மறுமுறை ஷேவ் செய்யும் போது உங்களுக்கு கஷ்டமாகிவிடும்.