ஆண்மகனின் அடையாளமாகவும் பிளாட்டின நகைகள் இருப்பதுடன், ஆண்களின் அழகை, ஆளுமையை வெளிப்படுத்துவதுடன், கம்பீரத் தோற்றத்தையும் தருகின்றன.
ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்
ஆண்களின் ஆளுமையை கூட்டும் நகைகளில் பிளாட்டின நகைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. பிளாட்டினம் என்பது பெண்கள் அணிகின்ற தங்க நகைகளுக்கு எதிர்பதமான வகையில் வெள்ளை நிறத்தில் உள்ளது. இயற்கையான வெண்மை நிறத்தில், தூய்மையான உலோகமாக பிளாட்டினம் உள்ளது கிடைப்பதற்குரிய பிளாட்டின உலோகம் மிக அரிதானது என்றால் சற்று விலை அதிகமாக உள்ளது.
வெற்றி பெறக்கூடிய ஆண்மகனின் அடையாளமாகவும் பிளாட்டின நகைகள் இருப்பதுடன், ஆண்களின் அழகை, ஆளுமையை வெளிப்படுத்துவதுடன், கம்பீரத் தோற்றத்தையும் பிளாட்டின நகைகள் தருகின்றன.
எந்தவிதமான ஆடவர் சருமத்திற்கு ஏற்றது என்பதாலும், உறுதியான ஆண்களின் உபயோகத்திற்கு ஏற்ற உறுதியானது பிளாட்டினம். பிளாட்டினம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து நாட்டில் நகைகளாக செய்யப்பட்டு அரசர்கள் அணிந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பூமிக்கடியில் மிகக்குறைவான அளவே கிடைக்க கூடியது என்பதால் மிக அரிய உலோகமாக பிளாட்டினம் கருதப்படுகிறது. ஆண்கள் அணியக்கூடிய பிளாட்டின நகைகள் எனும் மோதிரம், செயின் வகைகள், பிரேஸ்லெட், பெனன்ட் போன்றவை வருகின்றன. இந்த நகைகள் ஆண்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட டிசைனில், அழகிய வடிவமைப்பு, கூடுதல் பொலிவுடன் உருவாக்கப்படுகிறது.
கம்பீரமான தோற்றம் தரும் ஹாலோ செயின்கள் :
ஆண்கள் அணிகின்ற பிளாட்டின செயின்கள் என்பது நெருக்கமான இறுக்கிய அமைப்புகள் இல்லாமல் ஹாலோ வடிவமைப்புடன் உள்ளன. ஹாலோ டைப் என்பது பார்க்க ஆனமாய் தோற்றமளிக்கும் ஆனால் காற்றோட்டம் கொண்ட இடைவெளியுடன் காணப்படும். ஹாலோ டைப் செயின்கள் மெல்லிய தட்டை அமைப்பு மற்றும் உருண்ட கனமான அமைப்பு கொண்டவாறும் உள்ளன. இதில் தட்டையான அமைப்பில் டெண்டுல்கர் மாடல் செயின்தான் ஆண்களின் அதிக ஈர்ப்பை பெற்ற செயினாக உள்ளது.
கம்பிகளாக நீண்ட செயின்கள் :
கம்பி போன்ற நீள்செவ்வகம் மற்றும் உருவளை வடிவ மூடிய அமைப்புடன் கூடிய செயின்களும் ஆண்களும் ஏற்றதாக உள்ளது. பக்ள்ஸ் டைப் இணைப்பு கொண்ட செயின்களும் மிக விருப்பமான செயின்களாக உள்ளன.
கட்டழகு கரங்களுக்கு ஏற்ற பிரேஸ்லெட் :
ஆண்கள் உறுதியான கரங்களுக்கு ஏற்ற கம்பீர தோற்ற முடைய பிரேஸ்லெட்கள் கனனச்சிதமான வடிவமைப்புடன் உலா வருகின்றன. இவை வித்தியாசமான அமைப்புகளுடன் பாத்ததும் வியக்கும் வகையில் உள்ளன. பழங்கால வாட்ச் ஸ்ட்ராப் போன்ற இணைப்புகள் கூடிய பளபளப்பு மற்றும் மேட் பினிஷ் பிரேஸ்லெட்கள் வருகின்றன. பக்ள்ஸ் அமைப்பு கொண்ட பிரேஸ்லெட் போன்றவையும் பெரிய அளவிலான பிரேஸ்லெட்களான உள்ளன.
மெல்லிய கயிறு வகை பிரேஸ்லெட்கள் :
கயிறு மற்றும் கம்பி இணைப்புகள் கொண்டவாறு பிரேஸ்லெட்கள் வருகின்றன. ஒற்றையாய் உருளை வடிவ கயிறு போன்ற பிரேஸ்லெட் முதல் பல பின்னல் கயிறு அமைப்புடன் பிரேஸ்லெட் வருகின்றன. அதுபோல் சிறுசிறு வளையங்கள் இணைந்தவாறு நடுவில் பெயர் பட்டை (அ) தட்டையான அமைப்பு கொண்டவாறும் பிரேஸ்லெட் வருகின்றன.
இந்த வகை பிரேஸ்லெட்கள் எல்லாம் மெல்லிய வகையான நகைகளாக உள்ளன. மேலும் செயின் இணைப்பு, பட்டையான கம்பி இணைப்பு கொண்ட பிரேஸ்லெட்களும் வருகின்றன. வெள்ளை நிறத்தில் கொள்ளை கொள்ளும் பிளாட்டின நகைகள் ஆண்களின் ஆளுமைக்கு ஏற்றவாறு உருவாக்கி தரப்படுகிறது.