தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 / 2 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம் (அல்லது)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 6 பல்
வரமிளகாய் – 2
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
கடுகு – 1 / 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
காய்கறிகள் – காரட், பீன்ஸ் (விருப்பமெனில்)
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி கடுகு,வரமிளகாய், கருவேப்பில்லை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியவுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் உள்ள கலவையுடன் கலந்து (3 1 /2 கப் தண்ணீர்)
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
2 விசில் வந்தவுடன் இறக்கி விடலாம்.
குறிப்பு
சீரகம், வரமிளகாய், பூண்டு , சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து அரிசி, பருப்புடன் கலந்தும்அரிசி பருப்பு சாதம் செய்யலாம்.
Related posts
Click to comment