சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது தலைத்தூக்க தொடங்கியுள்ளது. கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய அங்கமாக வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 95 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.