தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். தற்போது இவர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு அதில் தன்னுடைய வாழ்வில் தான் சந்தித்த இன்னல்களையும் சம்பவங்களையும் பற்றி விவரித்திருக்கிறார்.
நடிகை சுருதிஹாசன் முதன்முதலாக பெண் பிரச்சினைகளைப் பற்றி உருக்கமாக கூறியிருக்கிறார். அந்த பதிவில் என்னுடைய முதல் பருவம் மிகவும் அழகானது. அழகாக சென்று கொண்டிருந்த பயணத்தில் என் உடலில் ஒரு சில பிரச்சினைகளால் பல சங்கடங்களை நான் சந்திக்க நேரிட்டது.
இந்த வேளையில் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் டிஸ்மெனோரியா இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் எனக்கு கருப்பை மற்றும் பிற இனப் பெருக்க உறுப்புகள் பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறினர். இதனால் நாள்பட்ட வலியை நான் சந்தித்தேன்.
என்னுடைய பள்ளி பருவத்தின் போது ஒவ்வொரு முறையும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி எனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து என்னை வீட்டுக்கு அனுப்பும் பொழுது எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடமாக இருக்கும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
உடலில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளால் நான் 10 கிலோ எடை கூடினேன். இதற்காக சரியாக சாப்பிடாமலும் உடற்பயிற்சி செய்து கொண்டும் இருந்தேன். இருப்பினும் என்னுடைய உடல் எடை கூடிக்கொண்டே இருந்தது. என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி கொள்ள நான் பல வகையான போராட்டங்களை சந்திக்க நேரிட்டது.
ஒரு கட்டத்தில் என் உடலின் தோற்றத்தை பார்த்து அனைவரும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் நான் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானேன். அந்த நிலையில் தான் எனக்கு புரோலாக்டினோமா என்ற நோய் இருப்பதை கண்டறிந்தேன். புரோலாக்டின் ஹார்மோன் சரியாக சுரக்கவில்லை என்றால் இந்த பிரச்சினை ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர்.