உலக கிரிக்கெட் வீரர்களையே வியக்க வைத்த வீரர் என்றால் அது தல தோனி தான். தன்னுடைய கேப்டன்ஷிப் திறமையால் இந்திய அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார்.
உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் கேப்டன்கள் மத்தியில் இந்த மூன்றையும் பெற்றது இவர் ஒருவர் மட்டுமே. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அமைதியாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்.
சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனபோது டிவியை ஆஃப் பண்ணிவிட்டு சென்ற இந்திய மக்கள் மத்தியில் தோனி இருக்கும் வரை கிரிக்கெட்டை கடைசி வரை பார்க்கலாம் என உணர வைத்தவர்.
கடைசி கட்ட ஓவர்களில் தோனி காட்டும் அதிரடியை எதிரணி வீரர்களும் என்ஜாய் பண்ணுவார்கள். ரயில்வேயில் டிக்கெட் கலெக்டர் ஆக இருந்து தனது கனவை நிறைவேற்றி ஆக வேண்டும் என அந்த வேலையை துறந்து கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டினார்.
அப்படி தோனி உலகம் முழுக்க பல ரசிகர்களை கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் புகழ்பெற்ற கிரிக்கெட் லீக் ஆக இருப்பது ஐபிஎல் தான். அதில் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று முறை கோப்பையை பெறச் செய்தார்.
இப்படி உலக புகழ்பெற்ற தோனியின் மொத்த சொத்து சுமார் 1044 கோடி அசையா சொத்துகள் மட்டுமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு விளம்பரப்படங்களில் மூலமே சுமார் 200 கோடி வரை லாபம் ஈட்டுகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் தோனிக்கு சினிமாபேட்டை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.