பொதுவாகவே மாநிறமாக இருக்கும் பெண்களுக்கும் சரி, கறுப்பாக இருக்கும் பெண்களுக்கும் சரி மனசுல சின்னதா ஒரு ஏக்கம் இருக்கும். அது என்னனா நாம கலரா இல்லையேன்னு. அப்படி ஃபீல் பண்ணுற ஆளா நீங்க! உங்களுக்கு தான் இந்த கட்டுரை..
ஒண்ணு சொல்லட்டா தோல் நிறத்துக்கும் அழகுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நாம எப்படி மேக்கப் பண்ணுறோம், அதை எப்படி ப்ரெசென்ட் பண்ணுறோம்னு கரெக்டா தெரிஞ்சுகிட்டாலே எல்லாரையும் உங்களை நோக்கி திரும்பிப் பார்க்க வெச்சிடலாம்.
1. மாய்ஷரைசர்
நம்ம சருமம் ஈரப்பசை இல்லாமல் வறண்டு இருந்தா பார்க்கவே அசிங்கமா தெரியும். அதனால் தினமும் குளித்து முடித்தவுடன் கை, கால், முகம் முடிந்தால் உடல் முழுவதும் மாய்ஷரைசர் கிரீமை சிறிதளவு பூசின மாதிரிதடவுங்கள். இதனால் உங்கள் முகமும், உடலும்எப்போதும் சற்று பளபளவெனகாட்சியளிக்கும்.
குறிப்பு: நீங்கள் பயன்படுத்தும் மாய்ஷரைசர் கிரீமில்குறைந்தது SPF 30 என்ற அளவில்இருக்க வேண்டும்.
2. ஃபௌண்டேஷன்
உங்கள் சரும நிறத்திற்கேற்ப பௌண்டேஷன் தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். ஃபௌண்டேஷன் தேர்ந்தெடுக்கும் போது கைகளில் வைத்து செக் செய்வதை தவிர்த்திடுங்கள். நெற்றியிலோ அல்லது உங்கள் தாடை பகுதியிலோ அதனைத் தடவி உங்கள் சரும நிறத்திற்க்கேற்ப ஃபௌண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
குறிப்பு:ஃபௌண்டேஷன் கலர் சிறிது நிறம் மாறி தேர்ந்தெடுத்தாலும், உங்கள் மொத்த அழகே கெட்டுவிடும்.
3. லிப் ஸ்டிக்
நீங்க செய்ய கூடிய மேக்கப்பில் லிப்-ஸ்டிக்குக்கும் தனி பங்கு உண்டு. கருப்பு நிற சருமம் இருப்பவர்களுக்கு மினுமினுக்கும்(GLOSSY) லிப்-ஸ்டிக் சிறந்த தேர்வாக இருக்காது. மேட் வகை எனப்படும் சற்றே அழுத்தமான, பளபளப்பினை கூட்டாத லிப் ஸ்டிக்கை நீங்கள் உபயோகிக்க வேண்டும். அதே சமயம் அடர்ந்த நிறங்களான ரெட், பெர்ரி, கோரல், ஹாட் பிங்க், பர்கண்டி, பிரவுன் ஆகிய கலர்கள் உங்கள் உதட்டின் அழகை இன்னும் எடுப்பாக காட்டிடும்.
4. ஐ – மேக்கப்
கண் மை என்பது கண்களுக்கு அழகு சேர்க்கும் ஒரு பொருள். இதனுடன் ஐ ஷடோவ்ஸ்(eyeshadows) உபயோகிக்கும் போது பெர்பில், க்ரீன், காப்பர், க்ரெய், சில்வர் பிரண்ட் பிங்க் மற்றும் பிரவுன் கலர் உபயோகிக்கலாம்.
5.சிகை அலங்காரம்
பார்ட்டிகளுக்குச்செல்லும் போது இன்னும் அழகா தெரிய ‘ஹேர் ஹை லைட்’டை முயற்சி செய்து பாருங்கள். உங்களை சுற்றி இருப்பாவர்கள் உங்களைக் காணும் பார்வையில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.சாக்லேட் பிரவுன் அல்லது பர்கண்டி கலர் உங்களுக்கு சரியான தேர்வு.
முக்கிய குறிப்பு: கரு நிற சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு பவுடர் உபயோகிக்கவே கூடாது என்பது உங்களுக்கு நான் தரும் கூடுதல் டிப்ஸ்.
எழுதியவர்: சுஜாதா ஜான்