வடிவமான புருவங்கள் உங்கள் முகத்திற்கு அதிசயங்கள் செய்ய முடியும்.அத்தகைய கண்களையும் அழகான புருவம் இருந்தால் வசீகரிக்க முடியும்.அதே சமயத்தில், தவறாக திருத்தப்பட்ட புருவங்களால் உங்கள் தோற்றத்தை கெடுக்க முடியும்.
ஆகவே நல்ல தரமான அனுபவமுள்ள பார்லரையே நீங்கள் நாடுவது அவசியம்.
நீங்கள் ஒரு முறைக்கு மேல் தவறாக செல்ல வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
இந்த குறிப்புகள் உங்கள் புருவங்களை திரும்பவும் வடிவத்திற்கு கொண்டு வர உதவி செய்யும்.
கருமையான மட்டும் அடர்ந்த புருவங்கள் அனைவரையும்கவரக்கூடியதாகும். தற்காலிகமாக புருவங்களை அடர்த்தியாக தோன்ற செய்வதற்கு மேக்கப் பொருட்கள் போதும்.ஆனால் நிரந்தர தீர்வை பெற சில எளிய முறைகள் உள்ளது. அவற்றை பயன்படுத்தும்போது உங்கள் புருவங்கள் இயற்கையாகவே அடர்த்தியாக தோன்றும்.
முயற்சித்து பாருங்கள்
செம்பருத்தி பூக்கள் புருவங்களை கருமையாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவும்.
செம்பருத்தி பூக்களை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.இந்த விழுதை உங்கள் புருவங்களில் தடவவும். 25-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
பிறகு வெந்நீரால் முகத்தை கழுவவும்.புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருமையாக மாறும்வரை இதனை தொடர்ந்து செய்து வரவும். இந்த பூக்கள் பாதுகாப்பானவைகள் தான்.
இருந்தாலும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் , நீரிழிவு நோய் உள்ளவர்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடுகிறவர்கள் ஆகியோர் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு இந்த சிகிச்சையை தொடர்வது நல்லது.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து, புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருப்பதைக் காணலாம்.
ஒரு வெங்காயத்தை சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து புருவத்தில் தேய்த்து வந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதை செய்யலாம்.இதிலிருக்கும் சல்பர், முடி உதிர்வை தடுக்கும்.
கற்றாழையில் உள்ள என்சைம்கள் புருவங்களுக்கு ஈரப்பதத்தை கொடுத்து கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்கிறது.கற்றாழை சாறை எடுத்து புருவத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவவும். இதனை தினமும் செய்யலாம்.
முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை எடுத்து அதை புருவங்களின் மீது தடவி 15- 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.
ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் ஈ வேர்க்கால்களை போஷாக்குடன் வைக்க உதவுகிறது.இரவு உறங்க செல்வதற்கு முன். சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவங்களில் நன்றாக தடவி கொள்ளவும்.மறுநாள் காலையில் முகத்தை கழுவவும்.
தினமும் இரவு நேரத்தில் இதனை தொடர்ந்து செய்து வரவும். முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய்யுடன் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
சென்சிடிவ் சருமமாக இருந்தால் சருமத்தில் வெடிப்புகள் தோன்றலாம். ஆகவே எண்ணெய்யை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். வெடிப்புகள் ஏற்பட்டால், பயன்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து புருவ வளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தில் புரத இழப்பை குறைக்கிறது.இதனால் புருவங்கள் வலிமையாகிறது. புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் வெந்நீரால் முகத்தை கழுவவும். தினசரி இரவில் இதனை செய்து வரலாம்.
மெலிதாக இருக்கும் புருவங்களை அடர்த்தியாக மற்றும் கருமையாக மாற்ற ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். ½ கப் ரோஸ் வாட்டருடன் ½ கப் எலுமிச்சை சாறை சேர்த்து புருவங்களில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து கழுவவும்.நல்ல தீர்வுகள் பெற இதனை தினசரி செய்து வரவும்.