29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
21 1450676164 7 castoroil
முகப் பராமரிப்பு

முகத்தில் அசிங்கமாக தோல் உரிகிறதா? அதை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…!

உடலிலேயே மிகப்பெரிய உறுப்பான சருமத்திற்கு முறையான பராமரிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அத்தகைய சருமத்தில் 4 வகைகள் உள்ளன. அவை சாதாரணம், எண்ணெய்ப்பசை, வறட்சி, சென்சிடிவ் போன்றவை. இவைகளில் எண்ணெய்ப்பசை மற்றும் வறட்சி சருமத்தினருக்கு தான் அதிக பிரச்சனைகள் ஏற்படும். அதில் வறட்சியான சருமத்தினருக்கு குளிர்காலங்களில் அதிகளவிலான பிரச்சனைகள் ஏற்படும். அதில் முகத்தின் வாயோரப் பகுதியில் தோல் உரிந்து வெள்ளையாக அசிங்கமாக காணப்படுவது.

இப்படி தோல் உரிவதற்கு காரணம் போதிய எண்ணெய் பசை இல்லாதது தான். எனவே அவ்வப்போது சருமத்திற்கு ஈரப்பசையை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதோடு, அடிக்கடி சருமத்தின் எண்ணெய் பசையை அதிகரிக்கும் மாஸ்க்குகளைப் போட வேண்டியது அவசியம். இங்கு சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி முகத்தின் அழகை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை மஞ்சள் கரு

ஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அந்த மாஸ்க்கில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அற்புத மாற்றங்களை நிகழ்த்தும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் உள்ள போதுமான அளவு ஃபேட்டி ஆசிட், சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை

பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி, முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டூம். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களான தோல் உலர்ந்து உரிவது வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவேடு இருக்கும்.

வெண்ணெய் பழம் மற்றும் தேன்

வெண்ணெய் பழத்தின் கனிந்த பகுதியை சிறிது எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை அதிகரிக்கப்பட்டு, சருமம் வறட்சியடைவது தடுக்கப்படும்.

வாழைப்பழம் மற்றும் தயிர்

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு நல்ல எண்ணெய் பசையை வழங்கும். அதற்கு தினமும் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சரும வறட்சி கட்டுப்படுத்தப்படும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சத்துக்கள் உள்ளது. எனவே அத்தகைய எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ, வறட்சியினால் தோல் உரிவது தடுக்கப்படும்.
21 1450676164 7 castoroil
தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கிருமிகள் அல்லது தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே அத்தகைய தயிரை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சியினால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.

Related posts

முகத்தை கழுவும்போது இதெல்லாம் நீங்கள் செய்கிறீர்களா?

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

முகம் ஜொலிக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் வாழைப்பழம்!

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan