29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
27 1511760113 2
சரும பராமரிப்பு

சரும நிறத்தை அதிகரிக்க இரவில் செய்ய வேண்டிய 15 அழகுக் குறிப்புகள்!!சூப்பர் டிப்ஸ்

நிறங்கள் பொருட்டில்லை. அவரவர் குணமே அழகை தீர்மானிக்கின்றன. அதுவே அழகை வெளிப்படுத்துகின்றது. இது நிதரசனம் என்றாலும் ஆசை யாரை விட்டது.

ப்ராக்டிகலாக எல்லாருக்குமே சிவப்பாக இருக்கத்தான் பிடிக்கிறது. இல்லை என்று சொல்பவர்களை மிகச் சொற்ப எண்ணிக்கையில் அடக்கிவிடலாம்.
சரும நிறத்தை அப்படியே மொத்தமாக மாற்ற அறுவை சிகிச்சையினால் மட்டுமே முடியும். ஆனால் அவை மிகவும் தீங்கு விளைவிக்கும் முறை. பின்னாளில் மிகவும்

பாதிப்புகள் உண்டாக்குபவை.

ப்ளீச் செய்வதாக இருந்தால் இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். பார்லரில் உபயோகப்படுத்தம் படும் ரசாயனங்களால் உடனடியாக நிறம் பெற்றாலும் விரைவில் சருமம் முதிர்ந்துவிடும். சுருக்கங்கள் உருவாகி வயதான தோற்றத்தை பெற நேரிடும். உங்களுக்கு எளிதான வகையில் சருமம் நிறம் பெற குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. உபயோகப்படுத்திப் பாருங்கள்.

ஏன் இரவில் செய்ய வேண்டும்?
இரவுகளில் திசுக்கள் புதிதாக உருவாவதால் இரவில் தான் நல்ல குறிப்புகளை முயற்சி செய்வதால் விரைவில் ரிசல்ட் கிடைக்கும். ஆகவே இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை இரவில் பயன்படுத்துங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரோஸ் வாட்டருடன் பால் :
காய்ச்சாத பாலை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும். தினமும் தொடர்ந்து செய்தால் நல்ல பலன்
கிடைக்கும்.

எலுமிச்சை சாறு :
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகம் கழுவி விடுங்கள். எல்லா சருமத்திற்கும் இது பொருத்தமாக இருக்கும்.

வெள்ளரிச் சாறு :
வெள்ளரிச் சாறு இயற்கையிலேயே ப்ளீச் செய்யும் சருமத்திற்கும் எந்த பாதிப்பு தராது. வெள்ளரிச் சாறுடன் சிறிது பால கலந்து முகத்தில் த்டவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவவும். தினமும் செய்ய வேண்டும்.

உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கின் சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுங்கள். 5 நிமிடங்களில் கழுவ வேண்டும்.

பட்டை பொடி :
அரை டீ ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை க்லந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யுங்கள். பின் முகத்தை கழுவிவிடுங்கள். இப்படி செய்தால் முகத்தின் நிறம் மாறும்.

தயிர் :
தயிரில் சிறிது கடலை மாவை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.

தேங்காய் நீர் :
தேங்காய் நீரை முகத்தில் தடவியபின் காய்ந்ததும் கழுவி விடுங்கள். இது சருமம் ஜொலிக்க வைக்கும். முகமும் நிறம் பெறும்.

தக்காளி பேக் :
தக்காளி மிகச் சிறந்த ப்ளீச் ஆகும். உங்களுக்கு எண்ணெய் அல்லது நார்மல் ஸ்கின்னாக இருந்தால் தக்காளியை அப்படியே பயன்படுத்தலாம். காய்ந்ததும் கழுவ வேண்டும். சருமம் நல்ல நிறம் பெறும். வறண்ட சருமம் இருந்தால் தக்காளி சாறுடன் தேன் கலந்து தடவுங்கள்.

பால் பவுடர் :
பால் பவுடர், பப்பாளி, மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் கலக்கி முகத்தில் பேக் போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்ய
வேண்டும்.

குளிப்பதற்கு முன் :
வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ மூன்றையும் அரைத்து உடலில் பூசி குளித்து வரவேண்டும். ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். சரும நிறம் அதிகரிக்கும்.

குங்குமப் பூவுடன் பால் :
நல்ல தரமான குங்குமப் பூவை வாங்கி பாலில் சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பாலின் நிரம் மாறும். பின்னர் குங்குமப் பூவை நன்றாக மசித்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவலாம். இது நல்ல குறிப்பு.

செம்பருத்திப் பூ :
தினமும் 1 செம்பருத்தி பூ சாப்பிட்டு வந்தால் செம்பருத்திப் பூவிலுள்ள தங்கச் சத்து உடலுக்கு கிடைக்கும். உடலும் தங்க நிறம் பெறும்.

புதினா :
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும். மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

கடுகு எண்ணெய் :
வட இந்தியர்களில் பளபளப்பான சருமத்திற்கு கடுகு எண்ணெய்தான் காரணம். கடுகு எண்ணெயை காய்ச்சி அதில் மஞ்சல் கலந்து முகத்தில் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவலாம். அல்லது இரவு தூங்குவதற்கும் முன் கடுகு எண்ணெயை பூசிவிட்டு படுக்கவும். வெயில்காலத்தில் பயன்படுத்த வேண்டாம். சூட்டை அதிகரிக்கும்.

சீரக நீர் :
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து ஆர வைத்துக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் இந்த நீரினால் முகத்தை கழுவிட்டு செல்லுங்கள். இவை சரும நிறத்தை கூட்டும்.

கேரட் எண்ணெய் :
கடைகளில் கேரட் எண்ணெய் விற்கும். அதனை வாங்கி தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சருமத்தில் தேயுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இது ஒரு சில வாரங்களில் சருமப் பொலிவை காண்பிக்கும்.

சந்தனக்கட்டை மற்றும் எலுமிச்சை :
சந்தனக் கட்டையில் எலுமிச்சை சாறினை உரசி அதனை பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும். முகமும் நல்ல நிறம் பெறும்.

ஆரஞ்சு பொடி :
ஆரஞ்சு பழத்தை பொடி செய்து அதனை பாலுடன் கலந்து பூசி வர வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்தாலே சரும நிறத்தில் நல்ல மாற்றம் தோன்றும்.

ஆவாரம்பூ :
ஆவாரம் பூவை தினமும் தூங்குவதற்கும் சாப்பிட்டு படுத்தால் உடல் தங்க நிறம் பெறுமாம். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்27 1511760113 2

Related posts

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகாகவும் அட்டகாசமாகவும் இருக்க ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

அக்குள் கருமையை நீக்கும் அசத்தலான டிப்ஸ்

nathan

முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்பு

sangika

பட்டுப் போன்ற முடி வேண்டுமா.. பளபளப்பான சருமம் வேண்டுமா?ஒரு வாழைப்பழம் போதும்

nathan

சூப்பர் டிப்ஸ் கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!

nathan

அழகு… உங்கள் கையில்!

nathan

அரோமா தெரபி

nathan

பெருந்தொற்று காலத்தில் அழகை அதிகரிக்க நினைக்கிறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan