27.5 C
Chennai
Friday, Oct 11, 2024
201705251255293603 sidedish lemon chicken SECVPF
அசைவ வகைகள்

சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்

புலாவ், சாதம், சப்பாத்தி, தோசைக்கு தொட்டு கொள்ள இந்த லெமன் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த லெமன் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சப்பாத்திக்கு அசத்தலான சைடிஷ் லெமன் சிக்கன்
தேவையான பொருட்கள் :

எலும்பு நீக்கிய சிக்கன் – அரை கிலோ
இஞ்சி – ஒரு சின்ன துண்டு
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
புளிக்காத தயிர் – 100 மில்லி
எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 30 மிலி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தயிரை கட்டியில்லாமல் நன்கு அடித்துவைக்கவும்.

* சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

* இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ஊறவைத்திருக்கும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

* சிக்கன், வெங்காயம் இரண்டும் சேர்த்து சிறிதளவு பொன்நிறமாக வந்தவுடன் தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனை நீங்கும்வரை நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.

* எலுமிச்சை சாறு, கட்டியில்லாமல் நன்கு அடித்து வைத்த தயிர், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

* பிறகு மீண்டும் சிக்கனை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவையை 5 நிமிடங்கள் வரை வைத்து கலக்கிவிட்டு, குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான லெமன் சிக்கன் ரெடி.

* லெமன் சிக்கனை, சாதம் அல்லது சப்பாத்தி வகைகளுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கும்போது அடுப்பை எறிய விட்டால், திரிந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், அடுப்பை அணைத்து வைத்து எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து கலக்கிவிட்டு பின்னர் அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேகவிடலாம். லெமன் சிக்கன் செய்யும்போது, இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவது பயன்தரும்.sidedish lemon chicken SECVPF

Related posts

ஆந்திரா கோங்குரா சிக்கன்

nathan

ருசியான மட்டன் சுக்கா!! சுவையாக செய்வது எப்படி!!

nathan

சூப்பரான முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

nathan

அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ்

nathan

தாய்லாந்து ஃப்ரைடு ரைஸ்

nathan

வெங்காய இறால்

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் சுவையான ஹலீம் வீட்டில் செய்வது எப்படி

nathan

பட்டர் சிக்கன் செய்யலாம் வாங்க…

nathan

நெத்திலி மீன் வறுவல்

nathan