32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
download 4
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா டீயை வெச்சும் ஃபேஸ் மாஸ்க் பண்ணலாம் !!!

டீ, ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்: அரை கப் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மென்மையாக தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.

டீ, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை மாஸ்க்: இந்த மாஸ்க் ஒரு சிறந்த முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதனால் முகத்தில் பருக்கள் போவதோடு, கண்ணிற்கு அடியில் இருக்கும் கருவளையமும் போய்விடும். வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க்கில் எலுமிச்சையை சேர்ப்பது நல்லது.

டீ மற்றும் சாக்லேட் மாஸ்க்: இந்த மாஸ்க்கில் இருக்கும் டீ மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய 3-4 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் டீயை விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

டீ மற்றும் கார்ன் ஃப்ளார் மாஸ்க்: 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார், 2 டேபிள் ஸ்பூன் டீ சேர்த்து கிளறி, முகத்திற்கு தடவி 10-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் சற்று பொலிவு பெற்றது போல் தெரிவதோடு, கரும்புள்ளிகளையும், இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கிவிடும். ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க் எல்லாம் வீட்டில் செய்து பார்த்து, அழகாக மாறுங்கள்.download 4

 

Related posts

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

பேரழகியா மாறணுமா?…அப்ப இத மட்டும் வீட்லயே முயன்று பாருங்கள்…

nathan

முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த பழம் பெரிதும் உதவும்…….

sangika

அம்மா தன் பெண்ணிற்கு சொல்லும் அழகின் ரகசியங்கள்!

nathan

கரும்புள்ளிகளை போக்கும் ஸ்ட்ராபெர்ரி பேஷியல்

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

nathan