26.5 C
Chennai
Friday, Jul 18, 2025
1587039

அதிர்ச்சி சம்பவம் ! கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் சினிமா நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் சினிமா குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு விஷால் உள்ளிட்டவர்கள் உதவி.

கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகளும் நடிகர்களும் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரேணிகுண்டா மற்றும் பில்லா 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன்1587039 வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘நான் தீப்பெட்டி கணேசன். ரேணிகுண்டா படத்தில் நடித்துள்ளேன். கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அதை நடிகர் பிரேம் குமார் தெரிந்துகொண்டு, நடிகர் சங்க பொறுப்பாளர் பூச்சி முருகனிடம் கூறி உதவிகள் கிடைக்க செய்தார்.

மேலும் நடிகர் விஷால் மற்றும் என் சினிமா நண்பர்கள் அனைவரும் எனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த நேரத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் நடிகர் ஸ்ரீமன் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.