மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பி ரா அணி யாமல் இருப்பது நல்லது என்பதற்கான சில ஆரோக்கியமான காரணங்கள்!!!

இந்திய பெண்கள் மத்தியில் பேடட் பிரா, அண்டர்வைர் பிரா போன்ற பல வகையான பிராக்கள் நாகரீக மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்ணமயமாக அணிவது முதல் வகை வகையாக அணிவது வரை, பிரா அணிந்து கொண்டால் தான் மார்பக ஆரோக்கியத்திற்கு நல்லது என உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் நினைக்கின்றனர். இருப்பினும் ஆராய்ச்சிகளின் படி, உள்ளாடை (பிரா) அணியாமல் இருப்பது தான் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இருப்பினும், இந்தியாவில் உள்ளாடை அணியாமல் இருப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக விளங்கும். ஆனால் இரவு தூங்க செல்வதற்கு முன்னாலாவது பிராவை கழற்றி விட்டு தூங்குங்கள். இதனால் ஒரு கால கட்டத்தில் நெஞ்சை சுற்றி மெலிதான உணர்வை பெறுவீர்கள்.

பிரா அணியாமல் இருப்பது பல காரணங்களால் நன்மையை ஏற்படுத்துகிறது. நல்ல இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்தி, சுவாசிப்பதை பாதிக்காமல் இருக்கச் செய்யும். முக்கியமாக உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பிரா அணியாமல் இருக்கும் ஐடியா உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் செய்யப்போவது ஆரோக்கியமான ஒன்றே தவிர தவறானது அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது பிரா அணியாமல் இருப்பதற்கான ஆரோக்கிய காரணங்களை நாங்கள் பகிர்ந்துள்ளோம். இருப்பினும் பிராவுடன் தூங்குவது கண்டிப்பாக கூடாது.

சுலபமாக சுவாசித்தல்

பிராவை கழற்றி விட்டால் சுவாசிக்க சுலபமாக இருக்கிறது தானே? பிரா இல்லாமல் இருக்கும் போது கிடைக்கிற வசதியை விவரிக்கவே முடியாது. பிரா இல்லாமல் இருக்கும் போது மூச்சு விடுவதற்கு சுலபமாக இருக்கிறது என பலரும் கூறுகின்றனர். அதற்கு காரணம் திடமான உணர்வை பெறுவதற்காக பிராவின் கடைசி ஊக்கை கூட மாட்டிக் கொள்வதால் அதன் இறுக்கம் அதிகரிக்கிறது.

நெஞ்சை சுற்றிய இறுக்கம்

நெஞ்சை சுற்றி இறுக்கி, அழுத்த தொடங்கினால், உங்கள் சருமத்தை அது வெட்ட ஆரம்பிக்கும். இதனால் நெஞ்சு பகுதியில் பாதிப்பு ஏற்படும். அதனால் அவ்வப்போது பிரா அணியாமல் இருந்தால், உங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

நல்ல தூக்கத்தை அளிக்கும்

இரவு தூங்க செல்வதற்கு முன்பு பிராவை கழற்றி விடுங்கள். இதனால் உலகத்தை விட்டு அப்படியே பறக்கும் அற்புதமான உணர்வை பெறுவீர்கள். நெஞ்சை சுற்றி எதுவும் இல்லாததால் மூச்சு விடுவதற்கும், படுக்கையில் அசைவதற்கும் எந்த ஒரு இடையூறும் இருக்காது. இதனால் நல்ல தூக்கமும் கிடைக்கும்.

அண்டர்வைர் பிராக்களில் இருந்து ஓய்வு

அண்டர்வைர் பிராக்களை தொடர்ச்சியாக அணிந்தால் பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தும். மார்பக வலியை தடுக்க அண்டர்வைர் பிராக்களை வாரம் இரண்டு முறை மட்டுமே அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

மார்பக புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும்

பிரா அணியமால் இருப்பது ஆரோக்கியமானது என்பதற்கு முக்கிய காரணம் – அது புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், இதை உண்மை என்றே பலரும் நம்புகின்றனர். அதனால் பிரா அணியாதது உங்கள் உடலுக்கு நல்லது.

நம்பமுடியாத வசதி

பிரா அணியமால் இருப்பதால் கிடைக்கும் வசதி கற்பனைக்கு அப்பாற்பட்டது. சுலபமாக சுவாசிப்பதில் இருந்து உங்கள் வசதி தொடங்குகிறது.

PMS-ன் போது உதவிடும்

PMS-ன் (ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்) போது, பெண்களின் மார்பு தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும். இந்த நேரத்தில் அசௌகரிய உணர்வை நீக்க வேண்டும் என்றால் பிரா அணியாமல் இருந்து, ஆரோக்கியமாக இருங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

One Comment

  1. Itha tha da nama thatha Patti 100 years ku munnala pannitu iruntha vellakara naikala neenka tha da unka mananketa culture a ulla viteenka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button