முகப் பராமரிப்பு

உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவது எப்படி?

பெண்களுக்கு பட்டுப்போன்று சருமம் தான் அழகு. ஆனால் சில பெண்களுக்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் இருந்தால், அவர்களுக்கு ஆண்களைப் போன்று மீசை மற்றும் சருமத்தில் ரோமத்தின் வளர்ச்சி அதிகம் இருக்கும்.

நிறைய பெண்கள் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க த்ரெட்டிங் அல்லது வேக்சிங் செய்வார்கள். ஆனால் இந்த முறையை ஒருமுறை கையாண்டால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டியிருக்கும். அதுவே இயற்கை வழிகளைப் பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இங்கு பழங்காலத்தில் கிழக்கு பகுதியில் வாழ்ந்த பெண்கள் முகத்தில் வளரும் முடியைப் போக்க பின்பற்றிய ஓர் வழி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பேஸ்ட் தயாரிக்கும் முறை:
இரவில் படுக்கும் முன் ஓட்ஸ் பொடியை நீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் ஓட்ஸ் பேஸ்ட் தயார்!

செய்யும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். பின் ஃபேஸ் க்ரீம் எதையேனும் தடவ வேண்டும்.

எவ்வளவு காலம் செய்யவும்?
இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், ஒரே மாதத்தில் உதட்டிற்கு மேல் உள்ள முடி நீங்கி, மீண்டும் அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

இதர நன்மைகள்
இந்த மாஸ்க்கை முகத்திற்கு போட்டால், முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீக்கப்படுவதோடு, அந்த மாஸ்க்கில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சருமத்தின் பொலிவும் அழகும் அதிகரிக்கும்.

unwanted facial hair women 15 1476514452

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button