ஆரோக்கியம் குறிப்புகள்

வயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்! தெரிஞ்சிக்கங்க…

இப்போதெல்லாம் உடல் எடை குறைக்கும் வேலைகள், அது தொடர்பான வேலைகள் தான் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் இன்றைய வாழ்க்கையில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்ய யாருமே விரும்பவதில்லை. எல்லாருக்கும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்கும் படியான வேலை தான் இருக்கிறது.

இயற்கையாகவே சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி ஒரேயிடத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் நமக்கு போதியளவு கிடைப்பதில்லை. உடல் எடை கணிசமாக அதிகரிப்பதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்குமோ என்று சொல்லி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள்.

விட்டமின் டியினால் உடல் எடை குறையும் என்ற ரீதியில் அல்லாமல் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்று கண்டுபிடிக்க இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். நானூறு நபர்கள் வரை இதில் பங்கேற்றிருக்கிறார்கள் அவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டார்கள்.

பிரிவுகள் :

முதல் பிரிவினருக்கு விட்டமின் டி சப்ளிமண்ட் கொடுக்கப்படவில்லை இரண்டாவது பிரிவினருக்கு ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவும் மூன்றாம் பிரிவினருக்கு அதிகப்படியாக சற்று அதிகப்படியான அளவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அனைவருக்கும் சமமாக குறைந்த கலோரி கொண்ட டயட் பின்பற்ற வைக்கப்பட்டிருக்கிறார்கள்

IU :

பொதுவாக விட்டமின் டி சப்ளிமண்ட்களில் பார்த்தால் இந்த IU என்ற குறியீடு இருக்கும். இது என்ன அளவு? மைக்ரோ கிராம், மில்லி கிராம் என்று இல்லாது இந்த IU என்ற அளவினை எப்படி எடுத்துக் கொள்வது என சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும்.

IU என்பதன் விரிவாக்கம் International Unit.இதுவும் ஒரு வகையில் அளவைக் குறிக்க பயன்படுகிறது தான். பொதுவாக நாம் பயன்படுத்துகிற மில்லிகிராம்,மைக்ரோ கிராம் ஆகியவற்றை நாம் உணர முடியும் அல்லது அந்த அளவினை பார்க்க முடியும். ஆனால் நம் கண்ணால் பார்க்க முடியாதவற்றை அளவீடு செய்யத்தான் இந்த IU இருக்கிறது.

கணக்கு? :

எடுத்துக் கொள்வதன் தாக்கம், அல்லது அது ஏற்படுத்துகிற விளைவுகளைக்கொண்டு இந்த IU அளவு நிர்ணயிக்கப்படுகிறது. நமக்கு இது பயன்படவில்லை என்றாலும் மருந்தியலாளர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அவர்கள் வெவ்வேறு இயல்புடையவற்றை ஒன்றாக சேர்க்கும் போது அதன் தாக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டியது அவசியம்.

அதற்கான அளவீடாக இதனை பயன்படுத்துவார்கள். மருந்துகளில் ஒரே மருந்து கூட இரண்டு அல்லது மூன்று வடிவங்களில் இருக்கும். முதல் வடிவத்தில் சேர்த்தால் இத்தனை அளவுகள், இரண்டாம் வடிவத்தில் சேர்த்தால் இத்தனை அளவுகள் என்ற மிகவும் துல்லியமான முறையில் பிரித்திருப்பார்கள்.

இரண்டு வகை :

விட்டமின் டியில் இரண்டு வகை இருக்கிறது. விட்டமின் டி2 மற்றும் விட்டமின் டி3. இதில் விட்டமின் டி2வை எர்கோகால்சிஃபெரல் என்றும் விட்டமின் டி3யை கோலிகால்சிஃபெரோல் என்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான அளவீடுகள், செயல்திறன்கள் இருக்கும்.

அந்த செயல்திறன்களை கணக்கிட IU தேவைப்படுகிறது. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் இரண்டு ஆப்பிள்களை வைத்துக் கொண்டு இவற்றிலிருக்கும் ஆற்றல் அல்லது சத்தினைக் கொண்டு பிரிக்க என்று வைத்துக் கொள்ளலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

முதன் முதலாக :

இந்த IU அளவீடு முறையை உலக சுகாதார அமைப்பு தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை 1931 ஆம் ஆண்டு விட்டமின் டி2வுக்கும் அதன்பிறகு விட்டமின் டி3 கண்டுபிடித்தவுடன் 1949ஆம் ஆண்டிலிருந்தும் இந்த அளவீடை பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

ஒரு IU விட்டமின் டி என்று சொன்னால் அது 0.025மைக்ரோ கிராம் என்று அர்த்தம்.

IUவிலிருந்து மைக்ரோ கிராம் மாற்ற வேண்டுமெனில் அந்த அளவுடன் 40 வகுத்தால் மைக்ரோ கிராம் கிடைக்கும்.

விட்டமின் டி பயன்பாடு :

ஆரம்பத்தில் சொன்ன ஆய்வாளர்களின் கதைக்கு வருவோம். அங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விட்டமின் டி சப்ளிமெண்ட் கொடுத்த நபர்களுக்கு உடலில் முப்பதுக்கும் அதிகமான புதிய செல்வகைகள் உற்பதியானது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றில் பெரும்பாலானவை ஃபேட் செல் மற்றும் மூளை செயல்பாடுகளை அதிகரிக்கும் செல்கள்.

லெப்டின் :

உடலில் போதுமான அளவு விட்டமின் டி கிடைக்கப்பெற்றால் அவர்களின் உடலில் லெப்டின் உற்பத்தி அதிகரிக்கிறது. லெப்டின் அதிகரித்தால் அவை நமக்கு பசியுணர்வை தூண்டாது, நிறைவைத் தரும்.இதனால் அடிக்கடி தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது.

கவனிக்க :

உடல் எடை அதிகரிக்கிறது என்று சொன்னால் தசைகளில் கொழுப்பு சேர்கிறது என்று நினைக்கிறோம், ஆனால் அதுமட்டுமே அர்த்தமில்லை, அதிக உடல் எடை கொண்டவர்களோ அல்லது பாடி பில்டராக இருப்பவர்களோ நம்முடைய ஆரோக்கியமான உடல் நலனுக்கு விட்டமின் டி கண்டிப்பாக தேவை.

விட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு தொப்பை, உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

டயட் :

என்ன தான் லோ கலோரி டயட்,நோ ரைஸ் டயட்,பேலியோ டயட் என்று விதவிதமான பெயர்களில் டயட் கடைபிடித்தாலும் உடல் எடையை குறைக்க உங்களுக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக தொப்பையை குறைக்க விட்டமின் டி மிகவும் அவசியம்.

ஆக இவர்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியின் முடிவில், உடல் எடையை குறைக்க விட்டமின் டி அவசியம் என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

விட்டமின் டி :

விட்டமின் டி என்று சொன்னாலே எல்லாரும் சூரியனைத் தான் கை காட்டுவார்கள். நிச்சயமாக சூரியனிடமிருந்தே நமக்கு தேவையான விட்டமின் டி கிடைக்கிறது என்றாலும், சில உணவுகள் மூலமாகவும் நீங்கள் விட்டமின் டி பெறலாம். காட் லிவர் ஆயில், சால்மன் மீன்,டூனா மீன்,பால்,முட்டை, மாட்டுக்கறி,வெண்ணெய்,சீஸ்,காளான் ஆகியவற்றில் விட்டமின் டி இருக்கிறது.

நோய்கள் :

விட்டமின் டி குறைந்தால் உடல் எடை அதிகரிப்பது என்பது மறைமுகமாக அதாவது நம் கண்ணுக்கு தெரியாமல் நடந்திடும் மாற்றம். இதைத் தவிர உங்களுக்கு வேறு என்னென்ன குறைபாடுகள் ஏற்படும் தெரியுமா?

பல் வலி அல்லது பல் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் வரும், காய்ச்சல், ஆஸ்துமா, ரத்த அழுத்தம்,மனச் சோர்வு ஆகியவை ஏற்படும். மிகத் தீவிரமாக என்றால் ஆர்த்ரைட்டீஸ்,இருதயக்கோளாறு ஆகியவை ஏற்படவும் வாய்ப்புண்டு.

அறிகுறிகள் :

ஆரம்ப காலத்தில் இந்த அறிகுறி தெரியும், விட்டமின் டி குறைந்ததென்றால் அதிகமாக வியர்க்கும், குறிப்பாக தலைப்பகுதியில் அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதன் பிறகு மிகவும் சோர்வுடன் இருப்பார்கள். நோயெதிர்பு சக்தி குறைவாக இருக்கும். கை கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படும். காரணமேயில்லாமல் உடல் எடை அதிகரிக்கும். தொடர்ந்து அதிகப்படியாக தூங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். முடி அதிகமாக கொட்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button