ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை ஆசியா, அமெரிக்க, ஆப்ரிக்காவில் பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும்.

Health Benefits Of Eating A Handful Of Flaxseeds Everyday
பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி விதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால், கீழே தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கும்

ஆளி விதை பல்வேறு டயட் திட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

ஆளி விதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுக்க உதவும். மேலும் இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு, உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். மேலும் இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரையக ஆரோக்கியம் மேம்படும்

ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையச்கூடாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே ஏராளமான அளவில் உள்ளது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இரையக செயல்பாட்டைப் பராமரிக்கவும், கரையக்கூடாத நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் முக்கிங் பங்கை வகிக்கிறது.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும்

ஆளி விதையில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். பொட்டாசியம் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை வளமான அளவில் வைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

ஏராளமான புரோட்டீன் நிறைந்தது

ஆளி விதையில் அதிகளவில் டயட்டரி புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் உள்ளன. எனவே இதை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.

இதய நோய்கள் தடுக்கப்படும்

ஆளி விதையில் சி-க்ளுக்கோசைடுகள் வளமான அளவில் உள்ளது. இந்த பாலிபீனோலிக் பொருட்கள் லிப்பிட் பெராக்ஸிடேஷன், பிளேட்லெட் அக்ரேஜேஷன், மற்றும் கேப்பில்லரி ஊடுருவல் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தடுத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

அழற்சியை எதிர்க்கும்

ஆளி விதையில் உள்ள வளமான அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும். ஒருவரது உடலில் அழற்சியானது அதிகம் இருந்தால், அதனால் இதய நோய்கள், ஆஸ்துமா, சர்க்கரை நோய் மற்றும் குறிப்பிட்ட வகையான புற்றுநோய்கள் விரைவில் வரக்கூடும். எனவே ஆளி விதையை தினமும் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்

ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் அழற்சி நோய்களான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், சொரியாசிஸ் மற்றும் ஆட்டோ-இம்யூன் கோளாறான லூபஸ் போன்றவை வரைமல் தடுக்கும்.

மெனோபாஸுக்கு முன்பான அறிகுறிகளை குறைக்கும்

ஆளி விதையில் உள்ள லிக்னன்கள், அதாவது ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு இறுதி மாதவிடாயை நெருங்கும் போது சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆளி விதையை பெண்கள் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் தடுக்கப்படும்

ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகளின் காரணமாக, ஆளி விதைகளில் உள்ள லிக்னன்கள் மாதவிடாய் நின்ற பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கின்றன. எனவே தினமும் பெண்கள் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவது, வயதான காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கருப்பை செயலிழப்பைக் குறைக்கும்

மாதவிடாய் நின்ற பெண்கள், தொடர்ச்சியாக ஆளி விதையை உட்கொண்டு வந்தால், சுழற்சி மாற்றங்களை தடுக்கும் மற்றும் கருப்பை செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு ஆளி விதை உடலில் பல மகிமைகளை நிகழ்த்துவதால், பெண்கள் கட்டாயம் தினமும் சாப்பிடுவது நல்லது.

கண்களின் வறட்சியைத் தடுக்கும்

ஆளி விதையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம் பராமரிக்கப்படும்

ஆளி விதையை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர, அது சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். எனவே உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், ஆளி விதையை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிடுங்கள்.

சரும பராமரிப்பு

ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். அதற்கு ஆளி விதை எண்ணெயை பாதிக்கப்பட்டப் பகுதியில் அன்றாடம் தடவ வேண்டும்.

தலைமுடி பராமரிப்பு

ஆளி விதை எண்ணெய் நகம் மற்றும் தலைமுடி வெடிப்பிற்கு சிகிச்சை அளித்து, நகம் உடைவது மற்றும் தலைமுடி வெடிப்பது போன்றவை தடுக்கப்படும். மேலும் ஆளி விதை எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button