30.3 C
Chennai
Sunday, May 19, 2024
முகப்பரு

எண்ணெய் பசை சருமத்தை அதிகம் பாதிக்கும் முகப்பரு – தடுக்கும் வழிகள்

எண்ணெய் பசை சருமத்தை அதிகம் பாதிக்கும் முகப்பரு - தடுக்கும் வழிகள்
பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும்.எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை ரோஸ்வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுப்பதுடன், மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். தினமும் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.எண்ணெயில் பொரித்த உணவுகள் சிலருக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும். எனவே அத்தகையவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, தினமும் 5 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடித்து, அந்த சீசனில் வரும் பழங்களை எடுத்து வர வேண்டும்.ஃபேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம் சிலர் ஃபேஷ் வாஷ் அல்லது ஃபேஷ் க்ரீம்மை மாற்றியிருப்பார்கள். அப்படி மாற்றிய க்ரீம்மானது, சருமத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கும். அவ்வாறு சருமத்திற்கு பொருத்தமற்றதை பயன்படுத்தினால், அவை பருக்களை உண்டாக்கும். கவலை மற்றும் மன அழுத்தம் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

இப்படி ஏற்பட்டால், அவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை செரிமான மண்டலம் சீராக இயங்காமல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைக்கு உள்ளானவர்களுக்கும் முகப்பருக்கள் வரக்கூடும்.

ஆகவே ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் சிறு உடற்பயிற்சியுடன், தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். தண்ணீர் குறைவாக குடிப்பது சிலர் தண்ணீரை மிகவும் குறைவாக குடிப்பார்கள். அத்தகையவர்களுக்கும் முகப்பருக்கள் அதிகம் வரக்கூடும். எனவே தண்ணீரை அதிகம் குடித்து பருக்கள் வருவதைத் தவிர்த்திடுங்கள்.

Related posts

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

sangika

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் முகப்பருவைப் போக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்வது.

nathan

இந்த ஒரு பொருள் உங்க முகத்தில் இருக்கும் பிம்பிளை சீக்கிரம் மறையச் செய்யும்!

nathan

முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கை போடுங்க…

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய

nathan

முகப்பருவில் இருந்து இரத்தம் வருவதைத் தடுக்க சில வழிகள்!!!

nathan

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

nathan