29.5 C
Chennai
Sunday, May 19, 2024
rytr
அழகு குறிப்புகள்

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! “மரு”வை அகற்ற சுலபமான வழி!

பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

1.பூண்டு பல்லை நன்றாக பேஸ்ட் போல் ஆக்கி அதை மரு இருக்கும் பகுதிகளிலும் மருவின் மீதும் தடவி விட்டு அதன்மேல் பேண்டேஜ் ஒட்டிவிடவும்.

2. அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி சாற்றினை மருவின் மீது தடவி வந்தால் கொட்டிவிடும்.

3.சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

4. உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.

5.இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

6. வெங்காயம்

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.
rytr
7.பெரிய மருக்களை நீக்குவதற்காக பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு அம்மான் பச்சரிசி என்ற மூலிகையுள்ளது. இது மணற்பாங்கான இடங்களிலும் வயல் காட்டிலும் விளையக்கூடியது. பூமியின் மீது படர்ந்திருக்கும். இத்தாவரத்தை கிள்ளினால் அதில் இருந்து பால் வரும். அந்தப்பாலை தினமும் மருவின் மீதும் முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் முகப்பரு மற்றும் மருக்கள் காணாமல் போகும் கொஞ்சம் அதிகமாக பால் எடுத்து நிறைய மருக்கள் உள்ளபகுதிகளில் தடவினால் முகப்பருக்களோடு சேர்ந்து மருவும் சென்று விடும். தடயமும் மறைந்து விடும்.

Related posts

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

இட்லி, தோசைக்கு சுவையான பூண்டு பொடி

nathan

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

சிறுநீரகத்தில் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள்….

sangika

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika

பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

nathan