28.9 C
Chennai
Monday, May 20, 2024
sl3752
சிற்றுண்டி வகைகள்

கோதுமை தேங்காய்ப்பால் பிரதமன்

இது கேரளா ஸ்பெஷல். பண்டிகை நாட்களில் செய்வார்கள்.

என்னென்ன தேவை?

கோதுமை 3/4 கப்,
தேங்காய் 1 பெரியது,
நசுக்கிய உருண்டை வெல்லம் 1 கப்,
ஏலக்காய் 4,
முந்திரி 8,
பொடியதாக நறுக்கிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்,
நெய் 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி, 1 1/2 கப் சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் அரைத்து, சுத்தமான துணியில் அல்லது மெல்லிய வடிகட்டியில், கையால் அழுத்திப் பிழிந்து பாலெடுத்துத் தனியே வைக்கவும். இது முதல் தேங்காய்ப் பால். மீண்டும் சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 2வது பாலெடுத்துத் தனியே வைக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து, அரைத்து, 3வது பாலெடுத்துத் தனியே வைக்கவும்.

உருண்டை வெல்லத்தை நன்கு நசுக்கி, ஒரு கரண்டி தண்ணீரில் கரைய விட்டு, கடாயை அடுப்பில் வைத்து வெல்ல நீரை விட்டுக் கொதித்ததும் வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் வெல்ல நீரை கடாயில் விட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். கோதுமையை அரை மணி நேரம் ஊறவைத்து, வடித்து, 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். நறுக்கிய தேங்காய், முந்திரியை 1 ஸ்பூன் நெய்யில் வறுத்துத் தனியே வைக்கவும்.
ஒரு உருளியில் 3வது தேங்காய்ப்பாலை விட்டு, மசித்த கோதுமை, வெல்லத் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி, கொதிக்கவிடவும். இப்போது, 2வது தேங்காய்ப்பாலை விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரியை சேர்த்து, அடுப்பை அணைத்து, சூட்டுடன் இருக்கும்போதே முதல் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து, மீதமுள்ள நெய்யை ஊற்றவும். சூடாகக் கிண்ணங்களில் பரிமாறவும்.sl3752

Related posts

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

ரோஸ் லட்டு

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

nathan

காரசாரமான வரகரசி – மிளகு மினி இட்லி

nathan

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

nathan