கர்ப்பிணி பெண்களுக்கு

பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
* சில பெண்களுக்கு மீன் அலர்ஜியாக இருக்கும். அத்தகைய பெண்கள் அதற்கு சிறந்த மாற்றாக, அதே சத்துக்கள் நிறைந்த தயிர் மற்றும் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* கர்ப்பிணிகள் அளவாக பப்பாளி சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்பட்டாலும், பப்பாளி விதை மற்றும் பச்சையான பப்பாளியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் பெண்கள் பான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். சோயாபீன்ஸில் புரோஜெஸ்டிரோன் உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாட்டைத் தூண்டி, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருந்தால், அது குமட்டலை ஏற்படுத்தும்.

* கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிக்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன், உடல் கருவளர்ச்சிக்குத் தேவையான போலிக் அமிலத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்திவிடும்.201610241317431703 foods to avoid during pregnancy SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button