Other News

கேரள அருகே கிறிஸ்தவ வழிபாடு கூடத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு..!

1589178 gsd

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் இன்று காலை கிறிஸ்தவ வழிபாட்டு மாநாடு நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ பெண்கள், குழந்தைகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதனிடையே, காலை 9:30 மணியளவில் வழிபாடு நடந்து கொண்டிருந்த மண்டபத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து பயங்கர சத்தம் எழுப்பியது. அறையின் மையத்திலும் அறையின் இரு நுழைவாயிலிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், மத வழிபாட்டு மையத்தில் நடந்த சம்பவம் வெடிகுண்டு எனத் தெரிவிக்கப்பட்டாலும், முதற்கட்ட விசாரணையில் அது வெடிப்புதான் என உறுதி செய்யப்பட்டது. டெட்டனேட்டர் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) படைகளின் உயர் அதிகாரிகளையும் கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..

nathan

ரஜினியின் ஜெயிலர் – ”இனிமேல் குடிக்க மாட்டோம்…” ரசிகர்கள் சபதம்

nathan

சனியும் ராகுவும் சேர்ந்து கஷ்டத்தில் துவம்சம் செய்யப்போகும் ராசிக்காரர்கள்

nathan

உடனே உட-லு-றவு…பீச்சில் கிடைத்த நட்பு…

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? சக போட்டியாளரிடம் சாதி பெயரை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் !! வைரலாகும் வீடியோ !!

nathan

பிரபல நடிகை வேதனை! அந்த ஹீரோவுடன் நடிக்க ஒரு இரவு தங்க சொன்னார்

nathan

காதலியுடன் இவ்வளவு மோசமாக நடந்துக்க மாட்டேன்

nathan

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த VJ பிரியங்கா

nathan

நாக சைதன்யா மீதுள்ள காதலால் அந்த இடத்தில் ஆசை ஆசையாய் குத்திய டாட்டூவை அழித்த சமந்தா

nathan