ஆரோக்கியம் குறிப்புகள் OG

க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட்!

creamy mushroom toast 1

தேவையான பொருட்கள்:

* காளான் – 20

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1

* பூண்டு – 4 பல்

* ஆரிகனோ – 1 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* பிரஷ் க்ரீம் – 1/4 கப்

* சீஸ் – 1/4 கப் (துருவியது)

* பார்ஸ்லி/கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)creamy mushroom toast 1

* பிரட் துண்டுகள் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெங்காயத்தை நன்கு பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் காளானை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து, பேப்பர் டவலில் வைத்து உலர்த்த வேண்டும். பின்பு அதை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு பூண்டு பற்களை எடுத்து அதை மிகவும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கெள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருக்கிக் கொள்ள வேண்டும்.

Creamy Mushroom Toast Recipe In Tamil
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நிறம் மாற வதக்க வேண்டும். பின் அதில் காளானைப் போட்டு உயர் தீயில் வைத்து 4-5 நிமிடம் நன்கு காளானில் இருந்து நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் பூண்டு, ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். ஒருவேளை அடிபிடிப்பது போன்று இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் பிரஷ் க்ரீம் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியாக அதில் பார்ஸ்லி/கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும். இப்போது க்ரீமி காளான் தயார்.

* அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து, முன்னும், பின்னும் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பிரட் டோஸ்ட் தயார்.

* இறுதியாக பிரட் டோஸ்ட்டின் மேல் தயாரித்த க்ரீமி காளானை வைத்து பரிமாறினால், க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் தயார்.

Related posts

உயர் ரத்த அழுத்தம் குறைய வீட்டு மருத்துவம்

nathan

கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மஞ்சள் நல்லதா?

nathan

கோபம் வராமல் இருக்க

nathan

ஆவாரம் பூ பயன்கள்

nathan

சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முக்கியமான சுகாதார குறிப்புகள்

nathan

மாதவிடாய் அறிகுறிகள்: periods symptoms in tamil

nathan

தொந்தரவு இல்லாத காலத்திற்கான மாதவிடாய் கோப்பைகளின் ரகசியங்கள்

nathan

குழந்தைக்கு சளி மூக்கடைப்பு நீங்க வழி

nathan

இப்படி உங்கள் குழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால்.. அவர்கள் இந்த பயங்கர நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்..!

nathan