Other News

மனமுடைந்த அழுத ஜோவிகா… பிக்பாஸில் என்ன ஆச்சு?

Bf0MCCBbrq

அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி சீசன் 7ன்  நுழைந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து எழுத்தாளர் பாவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விஷ்த்ரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்சன், விஷ்ணு, சரவண விக்ரம் மற்றும் பலர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த வார ஆட்டநாயகனாக பூர்ணிமா தேர்வு செய்யப்பட்டார். இந்த வாரம் தொடங்கிய பொது நாமினேஷனில் மாயா, பிரதீப், ரவீனா, மணி என பலரும் நாமினேட் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜோவிகா அழுதுகொண்டே இருப்பது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒரு போட்டியாளர் மற்ற இரண்டு போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்து அந்த வீடியோ பிடித்திருப்பதாக நினைப்பவர்களுக்கு “லைக்” மற்றும் பிடிக்காதவர்களுக்கு “டிஸ்லைக்” கொடுப்பார்.

பின்னர், அவர் பேசுகையில், “எனக்கு வனிதாவை ரொம்ப பிடிக்கும். நான் வனிதாவை பார்ப்பதற்காக அங்கே போனேன். ஆனால், அங்கு திரையில் வந்தது வனிதா பொண்ணுதான். அதனால், உனக்கு நான் லைக் கொடுக்கிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார். இதற்கு ஜோவிகா, கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

மேலும், மணி வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோவை ரவீணா பாத்துவிட்டு வெளியே வந்து மணிக்கு டிஸ்லைக் கொடுத்து “கேம்முக்கு ஸ்டாட்டர் தேவை” என்று விளக்கம் கொடுத்தார். பின்னர், அவர்கள் தனியாக அமர்ந்து பேசுகையில், “நீ உன் மனசாட்சிப்படி விளையாடல என்று சொல்ல, அதற்கு ரவீணா என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் விளையாடினேன். என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படியே செஞ்சேன்” என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Related posts

உடை மாற்றுவது போன்ற போலி வீடியோ வைரல்…!ராஷ்மிகாவை தொடர்ந்து கஜோல்…

nathan

கொடூரத்தின் உச்சம் – தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர்

nathan

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: முடி உதிர்தலுக்கான இயற்கை தீர்வு

nathan

சிறுநீரகம் பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

nathan

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

ஏழை மாணவர்கள் கல்விக்கு அயராது உழைக்கும் 70 வயது சுனிதா!

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..புகைப்படங்கள்

nathan

சரிகமப்பா அசானிக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் விஜய்!

nathan

தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி

nathan