Other News

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

qq6023 1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாரா பகுதியை சேர்ந்தவர் ஜோஷி. நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவரைப் போலவே மருத்துவமனையில் பணிபுரிந்த கலைவாணனும் காதலித்து வந்தார்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரியோர்கள் சம்மதத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாராவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து தட்டார்மடம் அருகே கொம்மட்டிக்கோட்டையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஜோஷி, கலைவாணன் இருவரும் கொம்மட்டிக்கோட்டை பதிவு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து காதல் ஜோடியை அழைத்து சமாதானம் செய்தனர். பதிவாளரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

Related posts

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் நஞ்சு ! 141 குழந்தைகள் மரணம்..

nathan

அடேங்கப்பா! அடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்தின் முன்னாள் காதலி ஹீரா..

nathan

மூத்த பெண்ணை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டு ஊர் சுற்றும் வனிதா

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

nathan

தல யு ஆர் கிரேட் ! லட்ச கணக்கில் பணத்தை கொடுத்ததோடு இல்லாமல் ஜிஎஸ்டி சேர்த்து கொடுத்த தல அஜித் !

nathan

கணவருடன் இந்தோனேசியாவுக்கு சென்ற பிக் பாஸ் அனிதா சம்பத்

nathan

பொல்லாதவன் பட நடிகை ரம்யா திடீர் மரணம் அடைந்ததாக இணையத்தில் தகவல் ……..

nathan

திருமணத்திற்கு பின் எலும்பும் தோலுமான நடிகை.. கவலையில் ரசிகர்கள்..

nathan

கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி..

nathan