Other News

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

1577309 9

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாந்தி, மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு லியோ படம் நேற்று வெளியானது. அண்டை மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காலை 7 மணிக்கு திரையிட தடை விதிக்கப்பட்டதால் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.

நேற்று காலை முதல் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். முதன்முறையாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் `லியோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைக்கலாம் என திரையுலக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“லியோ” படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இந்தியப் படமொன்றின் முதல் நாள் வசூல் சாதனையைப் படைத்துள்ளது `லியோ’ திரைப்படம்.

Related posts

பிக் பாஸ் 7 போட்டியாளர் ரவீணா தாஹாவின் க்யூட் புகைப்படங்கள்

nathan

பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..

nathan

என்னம்ம அனன்யா – மது போதையில் நிக்கக் கூட முடியல!

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

ஹாலிவுட் நடிகருடன் திருமணம்: நடிகை எமி ஜாக்சன்

nathan

திருமணமான ஒருவருடன் நீங்கள் கள்ள உறவில் இருக்கிறீர்களா?

nathan

அதிகம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்கவிளைவா?

nathan

அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய பாஜக நடிகை ரஞ்சனா

nathan

3 நாளில் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் சுனாமி! 1000கோடி எட்ட வாய்ப்பு

nathan