பிப்ரவரி 20 அன்று, உத்தரபிரதேச மாநிலம், கோடா மாவட்டம், மொஹிலிஹோலி கிராமத்தைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த இளைஞனை தடுத்து நிறுத்திய இருவர், துப்பாக்கி முனையில் அந்த இளைஞரைத் தாக்கிவிட்டு, அவரது சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக இளைஞர் அளித்த புகாரின் பேரில், அங்கித் வர்மா உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அங்கித் தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும், அங்கித் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில், கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அங்கித் வர்மா, இன்று போலீசில் ஆஜரானார். “சுட வேண்டாம்” என்று எழுதப்பட்ட பேனரை கழுத்தில் ஏந்தியபடி கொள்ளையன் அங்கித் காவல் நிலையத்தில் சரணடைந்தான்.
என்கவுன்டருக்கு பயந்து, அங்கித் போலீசில் சரணடைந்தார், அவர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.