நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி ஹீரோ லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தில் பிறந்த வனிதா, தனது இரண்டு மகள்களையும் கவனித்துக் கொள்வதற்காக பெற்றோர் மற்றும் பிற உறவினர்களை விட்டு விலகி இருக்கிறார்.
நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவை பிரிந்தார் ஆகாஷ்.
இந்த இரண்டு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷுடனும் வசித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஸ்ரீஹரி தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆசிர்வாதம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீஹரி பாலிவுட் நடிகரைப் போல் அழகாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். “விரைவில் முன்னணி நடிகராக வருவார்” என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீஹரி, நடிப்பில் ஆர்வம் காட்டாமல், இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.