லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.இவர் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துள்ளார்.இவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி பார்ட் 2ல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் பலர் திருமணத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்து சந்தோஷமாக வாழுங்கள் என ரசிகர்கள் அவர்களுக்கு துணையாக நின்றுள்ளனர்.
இவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் ட்ரெண்டிங் என்று கூறினால் மிகையாகாது.தற்போது மஹாலக்ஷ்மியுடன் கோவில் சென்ற பொழுது எடுத்த புகைப்படத்தினை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவில் வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை..வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை..என்னவள் வந்தால் அவள் விழி தந்தால்…காதலால் என்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவள் நிரூபித்தாள் என மனைவியை வர்ணித்து காதலை கூறியுள்ளார்.