Other News

பேத்தியின் பிறந்தநாளுக்காக அழகிய வீடியோவை பகிர்ந்த ராதிகா

radhika with her mother and daughter 4.jpg

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது பேத்தி ராதிகா சரத்குமார் தற்போது அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது பேத்தியை வாழ்த்தியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. வெள்ளி திரை சின்னத்திரை என்று அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார.. இந்த நிலையில் இவரின் மகள் பேத்தியான ராத்யாவிற்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ராதிகாவின் சினிமா வாழ்க்கையை பொருத்தவரை அவர் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மகளாவார். ராதிகாவிற்கு ஏற்கனவே மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது .பின்னர் அவர் ஆங்கிலேயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு பிறந்த மகள் தான் ரயான்.

பின்னர் அவருடனும் விவாகரத்து ஏற்படவே தனியாக வாழ்ந்து வந்தார் ராதிகா. பின்னர் ரேடான் மீடியா நெட்வொர்க் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் ராதிகாவிற்கும் காதல் ஏற்பட இருவரும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.்இவர்களுக்கு ராகுல் என்கிற ஒரு மகனும் இருக்கிறார். ராதிகா, சரத்குமார், ரயான், சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள்கள் வரலட்சுமி, பூஜா ஆகியோர் சென்னையில் ஒன்றாகவே வசித்து வருகின்றனர். இந்த அழகிய குடும்பம் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர் .சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார் அப்போது ஏதாவது ஒரு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

குறிப்பாக தன் மகள் வயிற்று பேத்தியாக இருக்கும் ராத்யாவுடன் அவர் மிகவும் நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஊருக்கு சென்றாலோ சூட்டிங் சென்றாலோ பேரன் பேத்திகளுக்காக ஏதாவது ஒரு கிப்ட் வாங்கி கொண்டு வந்து கொடுப்பதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த அழகிய தருணங்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் ராதிகா. இந்த நிலையில் அவர் இன்று மீண்டும் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார் .அதில் தனது பேத்தி ராத்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அதற்காக பேத்தியுடன் இருக்கும் அழகிய நினைவுகளை வீடியோவாக தொகுத்து அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..!

Related posts

ஹர்திக் பாண்டியாவுக்கு காதல் மனைவியுடன் மீண்டும் திருமணம்?

nathan

இந்த ராசி ஆண்கள் படாதபாடு படுத்தும் மோசமான கணவராக இருப்பார்களாம்…

nathan

பிரபல நடிகை தமன்னாவுக்கும் நடிகர் விஜய்க்கும் விரைவில் திருமணம்…. திடீர் முடிவு!!

nathan

இதனால தான் பிரகாஷ் ராஜ் விவாகரத்து பண்ணாரு..

nathan

திருமணத்திற்காக மதம் மாறினாரா அனிதா சம்பத் ?நெற்றியில் குங்கும் வைக்காதது ஏன் ?

nathan

அம்மாடியோவ் என்ன இது? சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் நடிகையா இது..?

nathan

பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

nathan

இந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…

nathan

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு விரைவில் செல்வம் சேரும் யோகம் உள்ளதா…

nathan