ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ் தனது அடுத்த பாராட்டுக்கு தயாராக உள்ளார்.
ரயில் ஓட்டுநராக 34 ஆண்டுகள் அனுபவம் உள்ள சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை ஓட்டும் வாய்ப்பை பெற்றார். இந்த பணிக்காக அவர் மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். அதிவேக ரயில்களில் இருந்து வரும் ரயில் சிக்னல்களைக் கவனிப்பது, புதிய அதி நவீன உபகரணங்களை இயக்குவது, சக ஓட்டுநர்களுடன் இணைந்து ரயில் வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பயிற்சிகளை முடித்துவிட்டு பணியில் சேர்ந்தார்.
1989ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்த சுரேகா, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்திய ரயில்வேயின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் தற்போது 1,500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.