கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கார் ஓட்டுநரிடம் வடமாநில பெண் பயணி ஒருவர் ஹிந்தியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு வாகன ஓட்டி ஒருவரிடம் வட இந்தியப் பெண் பயணி ஒருவர் கன்னடத்திற்குப் பதிலாக ஹிந்தியில் பேசுகிறார், இதனால் வாகன ஓட்டி கோபமடைந்து கன்னடத்தில் பேசச் சொன்னார். ஆனால், பெண் பயணி இந்தியில் தொடர்ந்து பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவர்: நான் ஏன் இந்தி பேச வேண்டும்?
வட இந்திய பெண் பயணி: சரி… சரி… சரி…
ஆட்டோ டிரைவர்: கர்நாடகா. கன்னடம் மட்டுமே பேச வேண்டும். நீ ஒரு வட இந்திய பிச்சைக்காரன்.
வட இந்திய பெண் பயணி: ஏன்?எங்களுக்கு கன்னடம் வராது.
ஆட்டோ டிரைவர்: இது உங்கள் நிலம் இல்லை…எங்கள் நிலம். கன்னடம் மட்டுமே பேச வேண்டும். நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்
கர்நாடகாவைச் சேர்ந்த கார் டிரைவருக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த பெண் பயணிக்கும் இடையே கன்னட ஹிந்தி உரையாடலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Why should I speak in Hindi?
Bangalore Auto Driver pic.twitter.com/JFY85wYq51
— We Dravidians (@WeDravidians) March 11, 2023