5 வயது சிறுவன் குதிரையில் நின்றவாறு 2 மணிநேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுழற்றினான், மேலும் பள்ளி மாணவி ஒரு கையால் 2 மணிநேரம் 1 படங்களை வரைந்தார்.
ரோகன் குமார் என்ற 5 வயது சிறுவன் குதிரையில் தொடர்ந்து 2 மணி நேரம் இரட்டை சிலம்பம்சுற்றி நின்று சாதனை படைத்துள்ளார்.
கோவை சின்னவேதம்பட்டியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி – தமிழ் பனன். இவர்களது ஐந்து வயது மகன் ரோகன்குமார் எல்கேஜி படித்து வருகிறார். ரோகன்குமார் நான்கு வயதிலிருந்தேசிலம்பம் கற்றுக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு அவர் குதிரையில் இரண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.
இந்நிலையில் இன்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடத்தில் மீண்டும் குதிரை மேல் ஏறி நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி நோபல் வேல்டு ரெக்கார்டு செய்துள்ளார். சாதனையை நிகழ்த்திய சிறுவனை பெற்றோர், உறவினர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறுவன் ரோகன்குமார் செய்த சாதனைக்கான கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
அதேபோல், மூத்த மகள் நித்யஸ்ரீ, 13, 8ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஒரு கையால்11 உடல் உறுப்பு உணர்வு வரைபடங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.