35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
gobi popcorn 1624100816
Other News

காலிஃப்ளவர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1 (சிறியது)

* ஐஸ் கட்டி தண்ணீர்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

* மோர் – 1/2 கப்

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மாவிற்கு…

* கோதுமை மாவு – 1 கப்

* சோள மாவு – 1/2 கப்

* பூண்டு பவுடர் – 1 டீஸ்பூன்

* வெங்காய பவுடர் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

gobi popcorn 1624100816

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும்.

* அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள்..

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

அதிர்ஷ்ட எண் எப்படி கண்டுபிடிப்பது

nathan

மஞ்சிமா உடன் முதல் HONEYMOON சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்

nathan

விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்!

nathan

பிக்பாஸ் ஜனனியின் வைரல் போட்டோ ஷூட்..

nathan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்..

nathan

Ajithkumar Car Race: துபாய் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி! 3வது இடம்

nathan